தோனியை பாலோ பண்ணி ஆடினேன்.. என்னை டீம்ல சேர்த்துக்கிட்டாங்க… !! ரகசியத்தை சொன்ன அந்த வீரர்
லண்டன்:தோனியை போன்றே விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன் என்று விஜய் சங்கர் கூறி இருக்கிறார்.
வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறுகிறது. தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருக்கிறது. அண்மைக் காலமாக, இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் இருந்து வருகிறது. இந்நிலையில் உலக கோப்பை இந்திய அணியில் விஜய் சங்கர் தேர்வானது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் அறிமுகம் ஆனது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் போட்டியில் தான். அந்த போட்டியில் என்னை பலருக்கு அடையாளம் தெரிய வில்லை. பிறகு இலங்கையில் நடந்த நிதாஸ்கோப்பை தொடரின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தேன்.
அந்த தொடரில் இருந்து சிறப்பாக ஆடி வருகிறேன். மேலும் தோனியை போன்று எப்போதும் ஆட்டத்தின் இடையே பொறுமையாகவும், ஆட்டத்தை கூர்ந்து கவனிக்கவும் ஆரம்பித்தேன். அதனால் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. பொறுமையும், போட்டியை பற்றிய கவனமும் இருப்பது எனது பலம். அதன் காரணமாக தான், அணியில் இடம் பிடித்துள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications