Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதுசு, புதுசா கற்பதில் அஸ்வின் ரொம்ப சமத்து பையன்.. 'துரோணர்' ஸ்டீபன் பிளமிங் சர்ட்டிபிகேட்!

ஆக்லாந்து: அஸ்வின் ஒரு சமத்தான, கற்றுக்கொள்ள துடிக்கும் ஒரு மாணவன் என்று நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராக இருந்த, ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

இந்தியாவின் பந்து வீச்சு நடப்பு உலக கோப்பையில் மிகவும் மேம்பட்டுள்ளது. அதிலும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 போட்டிகளில், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஷமிக்கு அடுத்த இடத்திலுள்ளார்.

புதுசு கண்ணா, புதுசு

புதுசு கண்ணா, புதுசு

இந்நிலையில், ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது: அஸ்வின் எப்போதுமே புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். பயிற்சியின்போது மிகவும் சமத்தாக கற்றுக்கொள்வார். அஸ்வின் புதிது, புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்ப்பதில் வல்லவர். அவரது பந்து வீச்சு அசத்தலாக உள்ளது.

மோகித் ஷர்மா

மோகித் ஷர்மா

இந்தியா எப்போதுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரில் தடுமாறும். இம்முறை மோகித் ஷர்மா, அந்த குறையை நீக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இருந்தே மோகித் ஷர்மா பந்து வீச்சு அபாரமாக உள்ளது.

நல்ல வேகம்

நல்ல வேகம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே, 140 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது அந்த அணிக்கு பலமாகும். முன் எப்போதும் இந்த அளவுக்கு வேகமாக இந்திய பவுலர்கள் பந்து வீசியது கிடையாது. ஜாகீர்கான் மற்றும் நெக்ரா ஜோடி அதுபோல பந்து வீசியது. ஆனால், இப்போதுதான் முதல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், அதிவேகமாக பந்து வீசுகின்றனர்.

ரெய்னா கலக்குவார்

ரெய்னா கலக்குவார்

சுரேஷ் ரெய்னா, ஷாட் பிட்ச் பந்து வீச்சில் திணறுவதாக கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு அது ஒரு பெரிய பிரச்சினையாகவே எனக்கு தெரியவில்லை. பலமுறை, ஷாட் பிட்ச் பந்தில் அவர், சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். சிறிது நேரம் கிரீசில் நின்றுவிட்டால், ரெய்னா அனைத்து வகை பந்துகளையுமே அடித்து ஆடிவிடுவார்.

ஒரே போட்டியில் மாறலாம்

ஒரே போட்டியில் மாறலாம்

காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகளுக்கு எந்ததெந்த அணிகள் தகுதி பெறும் என்று இப்போதே கூறிவிட முடியாது. அந்தந்த நாட்களில் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி கிடைக்கும். கெய்ல், மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் போட்டியின் போக்கையே முழுமையாக மாற்றக்கூடிய திறமை உள்ளவர்கள். இவ்வாறு பிளமிங் தெரிவித்தார்.

Story first published: Thursday, March 12, 2015, 12:36 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+