பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியும் அப்ளிகேஷன் போட்டார்!
டெல்லி: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியும் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதை அவர் கூறியுள்ளார்.
நேற்று தனது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளாராம் ரவி சாஸ்திரி. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை காலையில் அனுப்பியுள்ளேன். தேவையான அனைத்து ஆவணங்களையும் மெயிலில் அனுப்பியுள்ளேன் என்றார்.

இந்திய அணியின் இயக்குநராக 18 மாதம் பணியாற்றியவர் ரவி சாஸ்திரி. அவரது ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அது விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் போட்டுள்ளார். இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மனதில் ரவி சாஸ்திரிதான் இருப்பதாக தெரிகிறது. எனவே அவரே தேர்வு செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தீப் பாட்டீல் முன்பு பயிற்சியாளராக இருந்தபோது இந்தியா பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எனவே அவருக்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications