Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"2 பேரும் வச்சிக்கவே மாட்டோம்.." ராயுடு பற்றி தோனி சொன்ன அந்த வார்த்தை.. நெகிழ்ச்சி

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள சிஎஸ்கே வீரர் அம்பாதி ராயுடு குறித்து சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடியவார் அதிரடி வீரர் அம்பாதி ராயுடு. ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று யாராக இருந்தாலும் வெளுத்தும் வாங்கும் திறமை கொண்ட வீரராவார். டி20 கிரிக்கெட் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்ற போற்றப்படும் ரஷித் கானை வெளுத்த ஒரு சில வீரர்களில் அம்பாதி ராயுடுவும் ஒருவர். ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை மற்றும் அணிகளுக்காக ஆடிய பெருமை கொண்டவர்.

I Have been playing with Rayudu from India A times and he dont use mobile much like me says CSK Captain MS Dhoni in IPL Finals 2023

ஒட்டுமொத்தமாக 6 முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் இடம்பெற்றவர். அதுமட்டுமல்லாமல் மும்பை மற்றும் சென்னை அணிகள் அதிக ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு முக்கியக் காரணமாகவும் இருந்தவர் ராயுடு. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியுடன் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்தார். இதனால் சென்னை அணியின் கேப்டன் தோனி, கோப்பையை ராயுடு கைகள் பெற்று உச்சபட்ச மரியாதை வழங்கியுள்ளார்.

முன்னதாக ராயுடு குறித்து எம்எஸ் தோனி பேசுகையில், அம்பாதி ராயுடுவின் சிறப்பு என்னவென்றால் களத்தில் வெற்றிக்காக 100% உழைப்பையும் கொட்டக் கூடிய வீரர். ஆனால் ராயுடு அணியில் இருந்தால், என்னால் ஃபேர்பிளே விருதை வாங்க முடியாது. ஏனென்றால் சிறிய விஷயத்திற்கும் ராயுடு நிச்சயம் கோபமடைவார். எப்போது அணியின் வெற்றிக்கு ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டும் என்று நினைக்கக் கூடிய வீரர். என்னை பொறுத்தவரை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ராயுடுவும் ஒருவர்.

இந்திய அணி ஏ அணிக்காக இருவரும் ஆடிய போதே அவரை நன்றாக அறிவேன். ஸ்பின்னர்களையும், வேகப்பந்துவீச்சாளர்களையும் சரிசமமாக விளாசியக் கூடிய வீரர். அதனை அனைத்து வீரர்களாலும் ராயுடு அளவிற்கு அவ்வளவு எளிதாக செய்திட முடியாது. அதுதான் ராயுடுவின் ஸ்பெஷல். எப்போதும் ராயுடுவால் ஏதேனும் செய்திட முடியும் என்று நம்பிக்கை வைப்பேன். இப்போது அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். அவரும் என்னை போன்று அதிகமாக செல்போன் பயன்படுத்த மாட்டார்.

இந்தப் போட்டியை அம்பாதி ராயுடுவால் மறக்க முடியாது. அதேபோல் கிரிக்கெட் வாழ்க்கையை ராயுடு அமைத்துக் கொண்டுள்ளார். வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் அனைத்து வீரர்களும் கோப்பையை ராயுடுவுக்கு அர்ப்பணித்தனர். இதனால் ராயுடு நேற்றைய கொண்டாட்டத்தின் போது எமோஷனலாக இருந்தார்.

Story first published: Tuesday, May 30, 2023, 12:33 [IST]
Other articles published on May 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+