Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பழக்கத்தை எனக்கு யுவராஜ் சிங் கத்துக் கொடுத்தாரு..! விட முடியல..! இளம்வீரரின் ஓபன் டாக்

பெங்களூரு: ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் பழக்கத்தை நான் யுவராஜிடம் இருந்து கற்றுக் கொண்டதாக இளம் வீரர் சுப்மன் கில் கூறியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில். தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேர்வுக்குழுவின் கவனத்தை கவர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடினார். இளம் வயதில் இரட்டை சதமடித்தும் சாதனை புரிந்தார்.

அவர் தற்போது பெங்களூருவில் உள்ள நேஷனல் அகாடமியில் தீவிர பயிற்சி பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

வாய்ப்புக்காக வெயிட்டிங்

வாய்ப்புக்காக வெயிட்டிங்

இந்நிலையில் தற்போது பெங்களூருவில் பேட்டி அளித்த போது கூறியதாவது: இந்திய அணிக்காக எப்போது விளையாடும் என்ற அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கிடைக்கும் வாய்ப்பை நான் நிச்சயம் பயனுள்ளதாக மாற்றுவேன்.

ஆட்டோகிராப், போட்டோ

ஆட்டோகிராப், போட்டோ

தற்போது நான் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறேன். பயிற்சி முடித்து வெளியே வரும் போது இளம் ரசிகர்கள் என்னிடம் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டனர். உடனே நான் அவர்களிடம் சென்று அனைவருக்கும் ஆட்டோகிராப் கொடுத்து, போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.

யுவராஜ் கற்றுக் கொடுத்தார்

யுவராஜ் கற்றுக் கொடுத்தார்

இந்த பழக்கம் எனக்கு யார் இடத்தில் இருந்து வந்தது தெரியுமா? முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிடம் இருந்துதான் வந்தது. ஏனெனில் நான் சிறுவயதில் இருக்கும் போது யுவராஜ் மொகாலியில் ஆடுவார்.

வேடிக்கை பார்ப்பேன்

வேடிக்கை பார்ப்பேன்

அந்த ஆட்டத்தை நான் சென்று வேடிக்கை பார்ப்பேன். அப்போது யுவராஜ் பெவிலியன் நோக்கி வரும் போது அவரிடம் சென்று கையெழுத்து மற்றும் புகைப்படம் கேட்பேன். அவரும் எந்தவித சலனமும் இன்றி அனைவருக்கும் கையெழுத்து போட்டு விட்டு பின்பு போட்டோவும் எடுத்துக் கொள்வார்.

பின் தொடர்கிறேன்

பின் தொடர்கிறேன்

அவருடைய அந்த நல்ல பழக்கத்தை பார்த்த நான் இப்போதும் பாலோ செய்து வருகிறேன். என்னிடம் யார் வந்து ஆட்டோகிராப் அல்லது புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டாலும், நான் அவர்களுடன் சென்று அதனை செய்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறுவேன் என்றார்.

Story first published: Sunday, August 18, 2019, 10:22 [IST]
Other articles published on Aug 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+