Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்... எப்பப் பார்த்தாலும் கம்பீருக்கு மட்டும் இப்படி நடக்குது..??!!

கொல்கத்தா: உண்மையிலேயே கம்பீரைப் போல ஒரு சோகமான மனிதரை, உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மனிதரை இந்த நிமிடத்தில் பார்க்கவே முடியாது. காரணம், அந்த அளவுக்கு அவரைச் சுற்றி எதிர்மறையான சம்பவங்கள் எக்கச்சக்கமாக கூடி கும்மியடித்துக் கொண்டுள்ளன.

7வது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலிருந்தே கெளதம் கம்பீர் பெரும் சோகமாக இருக்கிறார். அவர் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லை. என்ன நடக்கிறது என்றே அவருக்குப் புரியவில்லை

அப்படி எல்லாமே அவருக்கும் அவரது அணிக்கும் எதிராகவே நடந்து வருகின்றன. லேட்டஸ்டாக நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியினபோது வெற்றி பெறும் நிலையை நோக்கி கொல்கத்தா போய்க் கொண்டிருந்தபோது திடீரென ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பேவின் அதிரடி ஹாட்ரிக்கால் எல்லாமே பாழாகிப் போனது. ராஜஸ்தான் தடாலடியாக வென்று வி்ட்டது. இதை கம்பீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட்டை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்று கூறியுள்ளார்.

சரி கம்பீரைத் துரத்தி வரும் சோகத்தைப் பாருங்கள்...

அடுத்தடுத்து 3 முட்டை

அடுத்தடுத்து 3 முட்டை

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் முதல் 3 போட்டிகளில் அவர் வரிசையாக டக் அவுட் ஆனார். 4வது போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்தார். அடுத்த போட்டியில்தான் சற்று ஆடினார்.

வரலாறு காணாத டபுள் டை

வரலாறு காணாத டபுள் டை

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியின்போது போட்டி டை ஆனது. பின்னர் வீசப்பட்ட சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது. கடைசியில் பவுண்டரிகள் அடிப்படையில் ராஜஸ்தான் வென்று விட்டது. கம்பீர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார்.

இப்போது ஹாட்ரிக் வேதனை

இப்போது ஹாட்ரிக் வேதனை

இந்த நிலையில் தற்போது அதே ராஜஸ்தானுடன் நடந்த 2வது போட்டியிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக மாறிப் போய் விட்டது.

தாம்பே ஹாட்ரிக்கால் அதிர்ச்சி

தாம்பே ஹாட்ரிக்கால் அதிர்ச்சி

ராஜஸ்தான் பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே கடைசி நேரத்தில் அதிரடியாக, அரிய வகை ஹாட்ரிக்கை நிகழ்த்தியதை கம்பீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெரும் சோகமாகி விட்டார்.

இப்படி பார்த்ததே இல்லை

இப்படி பார்த்ததே இல்லை

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், இப்படிப்பட்ட கிரிக்கெட்டை நான் பார்த்ததே இல்லை. இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

ஆனால் என்ன செய்வது

ஆனால் என்ன செய்வது

ஆனால் என்ன செய்வது. இதை நாம் மறந்து விட்டு அடுத்த போட்டிக்குப் போக வேண்டும்.இன்னும் எட்டுப் போட்டிகள் உள்ளன. அதை வென்றாக வேண்டும். பந்து வீச்சில் சுனில் நரீன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தவிர மற்றவர்களும் திறமையாக வீச வேண்டும் என்றார் கம்பீர்.

Story first published: Tuesday, May 6, 2014, 16:42 [IST]
Other articles published on May 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+