ரிஷப் பந்த் மாதிரி என்னோட காலகட்டத்துல சேவாக், தோனி, யுவராஜ் இருந்தாங்க...கங்குலி சொல்லியிருக்காரு!
டெல்லி : தான் ரிஷப் பந்த்தை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக உள்ளதாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வெற்றியாளர்கள் மீது தனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு என்றும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் தனியாளாக வெற்றியை பரிசளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய காலகட்டத்தில் சேவாக், எம்எஸ் தோனி, யுவராஜ் போன்றவர்கள் இத்தகைய வெற்றியாளர்களாக இருந்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் மகிழ்ச்சி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தை மாற்றக்கூடியவர்
இந்த போட்டியில் ரிஷப் பந்த்தின் ஆட்டம் குறித்து பாராட்டு தெரிவித்த அவர், பந்த்தை தான் தொடர்ந்து அருகில் இருந்து கண்காணித்து வருவதாகவும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்றும் மேலும் கூறினார். தனக்கு வெற்றியாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கை எப்போதுமே உண்டு என்று தெரிவித்துள்ளார்.

வெற்றியாளர்கள் மீது விருப்பம்
வெற்றியாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது தனியாளாக இருந்து போட்டிகளை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். இத்தகைய வெற்றியாளர்களை தான் மிகவும் விரும்புவதாகவும் தன்னுடைய காலகட்டத்தில் இத்தகைய திறமைகளுடன் சேவாக், எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான செயல்பாடு
மேலும் என்சிஏவில் ராகுல் டிராவிட் தொடர்ந்து சிறப்பாக செய்லபட்டு வருவதாகவும் இதை தான் எப்போதுமே குறிப்பிட்டு வருவதாகவும் கங்குலி கூறியுள்ளார். தற்போது இந்திய அணியின் அடுத்தகட்ட வீரர்களை டிராவிட் சிறப்பாக உருவாக்கி வருவதாகவும் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications