Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் போட்டிகளை விளையாடறதுக்கு பொறுமையும், அமைதியும் அதிகமாவே இருக்கு.. டிக்டாக் பௌலர்

மும்பை : டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அளவிற்கு தன்னிடம் அதிகமான பொறுமையும் அமைதியும் உள்ளதாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் தெரிவித்துள்ளார்.

52 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஹல் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

மேலும் விராட் கோலியின் கீழ் விளையாடும்போது அதிகமான சுதந்திரம் கிடைக்கும் என்றும் ரோகித்தின்கீழ் விளையாடும்போது அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என்றும் சஹல் குறிப்பிட்டுள்ளார்.

 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம்

டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம்

இந்திய அணிக்காக இதுவரை 52 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தனக்கு அதிகமான பொறுமையும் அமைதியும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட சஹல் விருப்பம்

விளையாட சஹல் விருப்பம்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சஹல் இடம்பெறுவது உறுதியாகவுள்ளது. ஆயினும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஆடவேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ரோகித்திடம் அதிகம் கற்கலாம்

ரோகித்திடம் அதிகம் கற்கலாம்

இதனிடை,ய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் கீழ் விளையாடும்போது அதிகமான சுதந்திரம் கிடைக்கும் என்று சஹல் தெரிவித்துள்ளார். இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலக தரத்திலான பேட்ஸ்மேன் என்று புகழ்ந்துள்ள சஹல், அவர்கீழ் விளையாடும்போது அதிகமாக கற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோச்சிடம் ஆலோசனை

கோச்சிடம் ஆலோசனை

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்த சஹல், கடந்த வாரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சிகளை துவக்கியுள்ளார். மேலும் தன்னுடைய பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் தான் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அவர் ஆன்லைன் மூலம் தனக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 4, 2020, 20:20 [IST]
Other articles published on Aug 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+