Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த லீக் போட்டியிலயும் விளையாடல... இர்பான் பதான் விளக்கம்

டெல்லி : வரும் 28ம் தேதி துவங்கவுள்ள இலங்கை பிரீமியர் லீக்கில் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

Recommended Video

#BOYCOTTIPL Trends; Fans slams BCCI and IPL 2020

இந்நிலையில் எந்த லீக் போட்டிகளிலும் தான் பங்கேற்கவில்லை என்று இர்பான் பதான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

I havent confirmed my availability in any Leagues -Says Irfan Pathan

எதிர்காலத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் விருப்பம் உள்ளதாகவும் ஆனால் தற்போது அதுபோன்ற எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் 28ம் தேதி துவங்கவுள்ளது. கொழும்பு, கண்டி, கலி, தம்பூலா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 பகுதிகளை சேர்ந்த 5 அணிகள் இந்த தொடரில் மோதவுள்ளன. மொத்தம் 23 போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடர் இலங்கையின் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம், ரங்கினி தம்பூலா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், பலக்கேலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூர்யவேவா ராஜபக்ஷே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த லீக் போட்டிகளில் 70 வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளதாகவும் அதில் இர்பான் பதானும் ஒருவர் என்றும் தகவல்கள் வெளியாகின. கடந்த ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இர்பான் பதான் சர்வதேச அளவில் நடைபெறும் டி20 போட்டிகளில் வரும் காலங்களில் தான் விளையாட உள்ளதாகவும், ஆனால் தற்போது இதுபோன்ற எந்த லீக் போட்டியிலும் தான் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 3, 2020, 17:29 [IST]
Other articles published on Aug 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+