For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி

டெல்லி : இந்தியாவிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதே தனது விருப்பமாக உள்ளதாக ரிஷப் பந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தன்னை பொருத்தவரை போட்டியை டிரா செய்வது இரண்டாவது ஆப்ஷனாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முக்கிய பங்கு வகித்த ரிஷப் பந்த் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2க்கு ஒன்று என்ற கணக்கில் கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. அதிலும் வெற்றியை தீர்மானத்த 4வது மற்றும் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

ஆட்டத்தில் முதிர்ச்சி

ஆட்டத்தில் முதிர்ச்சி

இதில் இந்திய வீரர்கள், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை சிறப்பாக வழிநடத்தினர். அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரிஷப் பந்த். சமீப காலங்களில் அவரது ஆட்டத்தில் மட்டுமின்றி பேச்சிலும் முதிர்ச்சி காணப்படுகிறது.

டிரா 2வது ஆப்ஷன்

டிரா 2வது ஆப்ஷன்

இந்நிலையில் தன்னை பொருத்தவரை இந்தியாவிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் போட்டியை டிரா செய்வது தனக்கு இரண்டாவது ஆப்ஷனாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளம்வீரர்களுக்கு கிட்பேக்

இளம்வீரர்களுக்கு கிட்பேக்

ஸ்போர்ட்ஸ் டுடேவிற்காக பேசிய அவர், பிசிசிஐயில் ஒப்பந்தம் செய்து தான் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு தொடர் முடிந்தவுடன் தன்னுடைய கிட்பேகை இளம் வீரர்களுக்கு தான் கொடுத்து வருவதாகவும் இதேபோன்று தான் சிறுவயதாக இருந்தபோது அதிகமானோர் தனக்கு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, January 26, 2021, 12:20 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
I used to give my kitbag to young cricketers -Rishabh Pant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+