Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு எப்போ ரிட்டயர்டு ஆவார்னு எனக்கு முன்னாடியே தெரியும்…! ஷாக் தந்த கோச்

இஸ்லாமாபாத்: முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் நீண்டகாலம் இடம் பெறாமல் இருந்தார் முகமது அமீர். ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை என்பதால் உலக கோப்பைக்கு பாகிஸ்தானுக்கு அமீர் தேர்வு செய்யப்பட்டார்.

I knew mohammad amir retirement says pakistan coach mikey arthur

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் லீக் சுற்றோடு வெளியேறியது. ஆனாலும், 8 ஆட்டங்களில் முகமது அமீர் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி 7வது இடத்தில் இருந்தார்.

27 வயதே ஆன அமிர் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அவரது ஓய்வு பாகிஸ்தானுக்கு பின்னடைவாக தான் இருக்கும் எனவும் தெரிகிறது.

அமீரின் இந்த திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி அர்துர் கூறுகையில், மற்றவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம். ஆனால், ஓராண்டாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அமீர் சிந்தித்து வந்தார். இதுகுறித்து என்னிடமும் பேசி இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு, உடல் வலிமை இல்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம். உடல்நிலையை பொறுத்து எந்த போட்டிகளில் ஆட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது வீரர்களின் தனிப்பட்ட கருத்து.

என்னை பொருத்தவரை அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியிருந்தா

Story first published: Tuesday, July 30, 2019, 22:26 [IST]
Other articles published on Jul 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+