Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியும், கேதாரும் ஏன் ஸ்லோவா விளையாடினாங்க? அந்த உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும்

எட்ஜ்பாஸ்டன்: தோனியும், கேதார் ஜாதவும் ஏன் மந்தமான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும் என்று ஹிட்மேன் ரோகித் சர்மா உண்மையை உடைத்திருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசி 5 ஓவர்களில் இந்திய வெற்றிக்கு தேவைப்பட்ட 71 ரன்கள். அப்போது களத்தில் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் இருந்தனர். இருவரும் பவுண்டரிகள் அடிக்காமல் சிங்கிள் அடிப்பதில் ஆர்வம் காட்டினர்.

மொத்தம் 39 ரன்கள்

மொத்தம் 39 ரன்கள்

இறுதியில் இந்த ஜோடி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டும் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது. அதில் இருவரும் 20 சிங்கிள் ரன்கள் அடித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்ததோடு, கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என்று ஆளுக்கு ஒரு பக்கம் இருவரையும் பிரித்து மேய்ந்து தள்ளினர்.

ரோகித் ஆதரவு

ரோகித் ஆதரவு

இந்த சூழ்நிலையில், ஹிட் மேன் ரோகித் ஷர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், தோனி மற்றும் கேதார் இருவரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர்.

ஆடுகளம் மந்தம்

ஆடுகளம் மந்தம்

ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் மந்தமாக இருந்தது. ஆகையால் தான் அவர்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. அதை இங்கிலாந்து அணியினர் அழகாக பயன் படுத்திக் கொண்டனர். இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ பால்களை அதிகமாக வீசினர். அத்துடன் இங்கிலாந்து பந்துவீச்சை சரியாக கணிக்க முடிய வில்லை என்றார்.

முயற்சியே செய்யவில்லை

முயற்சியே செய்யவில்லை

தோனி, கேதாருக்கு இவர் வக்காலத்து வாங்கியிருப்பது ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்திருக்கிறது. கடைசி 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்டது. கடின இலக்குதான் என்றாலும் அதை எடுக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும்.

இருவரும் செய்தது என்ன?

இருவரும் செய்தது என்ன?

ஆனால்.... கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை. இங்கிலாந்து மெதுவாக வீசி அடிக்க விடாமல் செய்துவிட்டதாக கூற முடியாது. அடித்து ஆட முயற்சித்து, சரியாக அடித்து ஆடமுடியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தோனியும், கேதாரும் என்ன செய்தார்கள்?

50 ஓவர்கள் தான் முக்கியம்

50 ஓவர்கள் தான் முக்கியம்

இருவரும் எந்த முயற்சியும் செய்த மாதிரியே செய்யவில்லை. வெற்றி இலக்கை விரட்டுவதற்காக ஆடுகிறார்களா அல்லது 50 ஓவர்களை முழுமையாக விளையாட வேண்டும் என்ற கடமைக்காக ஆடியது போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, July 1, 2019, 13:42 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+