Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ஸ்மித், வில்லியம்சன்கிட்ட இருந்து எவ்ளோ முடியுமோ கத்துக்கிட்டு இருக்கேன்... ஜோ ரூட் வெளிப்படை

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த தொடரில் இந்தியாவுடன் மோதவுள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரை இந்த அணி வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களை கற்றுக் கொண்டு அதை தன்னுடைய ஆட்டத்தில் பயன்படுத்துவதாக ரூட் தெரிவித்துள்ளார்.

4 போட்டிகள் தொடர்

4 போட்டிகள் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. முதல் இரு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

கொரோனா பரிசோதனைகள்

கொரோனா பரிசோதனைகள்

சென்னையில் நடைபெறவுள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளையொட்டி 6 நாட்கள் குவாரன்டைன் மற்றும் கொரோனா பரிசோதனைகளை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முடித்துள்ளது. தற்போது நெட் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த தொடரை வெல்லும் தீவிரத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தொடர் நாயகன் ஜோ ரூட்

தொடர் நாயகன் ஜோ ரூட்

கடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் குறிப்பாக இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டி சென்றுள்ளார் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ஜோ ரூட்.

கற்று தேர்கிறேன்

கற்று தேர்கிறேன்

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் இருந்து கிரிக்கெட்டின் நெளிவு சுளிவுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்று தேர்ந்து அதை தன்னுடைய ஆட்டத்தில் பிரயோகித்து வருவதாக ஜோ ரூட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, February 4, 2021, 21:46 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+