Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழகத்தில் எனக்கு பிடிச்சதே 'ஜிகர்தண்டா'... ஆஸி. மாஜி கிரிக்கெட் வீரர் பிரெட்லீ 'கலகல'

திண்டுக்கல்: தமிழகத்தில் எனக்கு அனைத்து உணவு வகைகளும் பிடிக்கும்.. குறிப்பாக ஜிகர்தண்டா ரொம்பவும் பிடிக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட்லீ கூறியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் டிஎன்பில் போட்டியில் பங்கேற்கும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பிரெட்லீ பயிற்சி அளித்தார். அங்கு என்பிஆர் கல்லூரியில் மாணவர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

பிரெட்லீயிடம் மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். இந்திய வீரர் டோணி குறித்து கூறுகையில், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை நினைவு கூர்ந்தார்.

பும்ரா அபாரம்

பும்ரா அபாரம்

மேலும் இந்திய அணியில் தற்போது பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது; அவரது பவுலிங் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது. துல்லியமாகவே பும்ரா பந்துவீசுகிறார் என்றும் பிரெட்லீ கூறினார்.

டெண்டுல்கர்

டெண்டுல்கர்

அதேபோல் இந்திய அணியில் கங்குலி, டோணி உள்ளிட்ட பலருக்கும் பந்துவீசியுள்ளேன். ஆனால் டெண்டுல்கருக்கு பந்துவீசியதுதான் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

அப்போது தமிழகத்தின் பிடித்தமான உணவு எது? என மாணவர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த பிரெட்லீ, இங்கு கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் பிடிக்கும். குறிப்பாக ஜிகர்தண்டா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

Story first published: Tuesday, July 25, 2017, 11:45 [IST]
Other articles published on Jul 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+