எங்க நிறுத்தினேனோ அங்க இருந்து சிறப்பா தொடங்குவேன்... கோலியின் நம்பிக்கை
மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டு வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
Recommended Video
இந்நிலையில், வீட்டிற்குள் முடங்கியுள்ள கேப்டன் விராட் கோலி, தான் நிறுத்திய இடத்திலிருந்து தன்னால் மீண்டும் சிறப்பாக துவங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தான் தன்னுடைய பிட்னசை காட்டிலும் மனதை சிறப்பாக வைத்துக் கொள்ளவே மிகவும் மெனக்கெடுவதாகவும் அதனால் தான் மிகவும் உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீட்டில் முடங்கயுள்ள விராட் கோலி
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 17ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளையும் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்யும் முடிவிற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், பரபரப்பாக செயல்பட்டு வந்த கேப்டன் விராட் கோலியும் வீட்டிற்குள் முடங்கியுள்ளார்.

விராட் கோலி உறுதி
கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் சிறப்பாக தொடர்வேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். உடலின் உறுதியை காட்டிலும் தன்னுடைய மனநலனை காப்பதில் தான் மிகுந்த சிரத்தை மேற்கொள்வதாகவும் அதனால் அது சாத்தியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனதை தான் குந்த மகிழ்ச்சியுடன் வைத்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சக வீரர்களை மிஸ் செய்கிறேன்
ஐபிஎல் போட்டிகளை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். மற்ற தொடர்களில் ஒரு அணியுடன் மட்டுமே விளையாட முடியும் என்றும் ஆனாலும் அவர்களுடனும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களுடனும் கலந்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பிடித்தமான போட்டி
2011 உலக கோப்பையை அடுத்து தனக்கு மிகவும் பிடித்தமான போட்டி குறித்து கூறுவது மிகவும் கடினமானது என்றும், ஒவ்வொரு போட்டியும் தனக்கு சிலவகை அனுபவங்களை அளித்துள்ளதாகவும் அவர் கூறனார். ஆயினும் கடந்த 2016ல் மொகாலியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மோதிய டி20 உலக கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியே தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications