For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2017லயே அவரோட ரிடையர்மெண்ட் பத்தி என்கிட்ட சொல்லிட்டாரு... ரகசியத்தை உடைத்த மஞ்ச்ரேகர்

டெல்லி : கடந்த 2017லேயே தன்னுடைய ரிடையர்மெண்ட் குறித்து முன்னாள் கேப்டன் எம்எஸ் தன்னிடம் வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni Started Practice in ranchi for IPL 2020

கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய சஞ்சய் மஞ்ச்ரேகர், கடந்த 2017ல் நடைபெற்ற கேப்டன் விராட் கோலி திருமணத்தின்போது தான் இதுகுறித்து தோனியிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் பிட்டாக இருக்கும்வரை, அணியின்
வேகமான பௌலரை வெல்லும் வரையிலும் தான் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தோனி கூறியதாகவும் மஞ்ச்ரேகர் கூறினார்.

கூலாக உள்ள தோனி

கூலாக உள்ள தோனி

கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. அவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா என்பதே இந்திய கிரிக்கெட் உலகின் முக்கிய விவாதமாக உள்ளது. ஆனால் இதுகுறித்தெல்லாம் எதுவம் வாய் திறக்காமல் கர்மமே கண்ணாக தனது பணிகளை தொடர்ந்து வருகிறார் தோனி.

செப்டம்பர் 19ல் துவக்கம்

செப்டம்பர் 19ல் துவக்கம்

இந்நிலையில் யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் தோனி. இதற்கென ராஞ்சியில் அவர் தனது பயிற்சிகளை துவக்கியுள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து இதுவரை 3 கோப்பைகளை வென்று சாதித்துள்ள தோனி, இந்த முறை கோப்பையை வெல்வாரா, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா மற்றும் இதைகொண்டு சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்பாரா என்பது குறித்து தொடர் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

2017ல் தோனி பேச்சு

2017ல் தோனி பேச்சு

இந்நிலையில், கடந்த 2017லேயே தோனி தன்னுடைய ரிடையர்மெண்ட் குறித்து தன்னிடம் பேசியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் திருமணத்தின்போது தாங்கள் இருவரும் இதுகுறித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பிட்டாக இருக்கும் வரையிலும், அணியின் வேகமான பௌலரை வெல்லும் வரையிலும் தான் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.

தோனி சிறப்பாக விளையாடுவார்

தோனி சிறப்பாக விளையாடுவார்

இந்த ஐபிஎல் 2020 போட்டிகளில் தோனி சிறப்பாக விளையாடுவார் என்று தெரிவித்த மஞ்ச்ரேகர், இந்த தொடரில் நான்கைந்து சர்வதேச பௌலர்களே உள்ளதாகவும் அவர்களை எளிதாக தோனி எதிர்கொள்வார் என்றும் கூறினார். மேலும் தோனி ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வெற்றியாளராகவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துபவராகவும் உள்ளதாக மஞ்ச்ரேகர் குறிப்பிட்டார்.

Story first published: Sunday, August 9, 2020, 11:49 [IST]
Other articles published on Aug 9, 2020
English summary
Manjrekar also reckoned Dhoni would come good in the IPL 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+