சென்னை: ரக்ஷா பந்தன் நாளில் நான் எனது சகோதரிக்கு அனுப்பும் செய்தி, ''ஐ லவ் ஹெர்'' என்று வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கின் சகோதரன் சச்சின் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 58 கிலோ எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக் முதல் வெண்கலத்தை வென்றார். தற்போது நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா எந்த பதக்கத்தையும் வெல்லாத நிலையில், முதன் முதலாக இந்திய ரசிகர்களுக்கு பரிசாக வெண்கலத்தை சாக்ஷி வென்று, இந்தியாவுக்கு கவுரவத்தை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றியை இந்தியா முழுவதும் விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாக்ஷியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
. இதுகுறித்தும், ரக்ஷா பந்தன் நாளில் தங்கைக்கு அளிக்க இருக்கும் பரிசு குறித்தும் சச்சினிடம் கேட்டபோது,'ஐ லவ் ஹெர்' என்றார்.
ரக்ஷா பந்தன் திருவிழா வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் இந்த விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சாக்ஷி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது அவரது அண்ணன் சச்சினுக்கு மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.