Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிடில் ஓவரில் தொடர்ந்து அவுட் ஆனதால் தோல்வி: டோணி

புனே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஓவர்களில் வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆனதாலேயே தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் டோணி கூறுகையில், அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மிடில் ஓவரில் நாங்கள் அதிகமான விக்கெட்டுகள் இழந்துவிட்டோம்.

Indian batsman M.S.Dhonii plays a shot during the first ODI match against Australia in Pune

எந்த ஜோடியும் மோதுமான அளவுக்கு நிலைத்து நிற்கவில்லை. 4-வது வீரர் வரிசைக்கு யுவராஜ்சிங் தான் பொருத்தமானவர். அதில் சந்தேகம் இல்லை. ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரை யுவராஜ்சிங்குக்கு 4-வது வீரராக களம் இறக்கினோம்.

300 ரன்னுக்கு மேல் எடுப்பது என்பது இந்த ஆடுகளத்தில் கடினமே. சுழற்பந்து வீரர்கள் ஜடேஜா,அஸ்வின் நன்றாகத்தான் வீசினார்கள். நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை. எந்த ஒரு வீரரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியை நாங்கள் மிகவும் சாதாரணமாக நினைக்கவில்லை என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி கூறுகையில், எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. மெக்காய், ஜான்சன் தொடக்கத்திலேயே அபாரமாக வீசினர். வெற்றி ஒவ்வொருவரது பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆரோஞ்ச் பிஞ்ச் அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்றார்.

Story first published: Tuesday, October 15, 2013, 17:41 [IST]
Other articles published on Oct 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+