தோனியின் மகளை கடத்தப்போறேன்... நடிகை ப்ரீத்தி ஜிந்தா போட்ட ட்வீட்டால் பரபரப்பு
மொகாலி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, சென்னை கேப்டன் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 5ம் தேதி, மொகாலியில் பஞ்சாப் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி சென்னையை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வில்லை.

அன்று போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் கைகுலுக்கிப் பேசிய புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. வெவ்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் பேசிக்கொள்வது வழக்கமான ஒன்று.
ஆனால் உரிமையாளர் அப்படி சகஜமாக மைதானத்தில் பேச மாட்டார்கள் என்பதால் அந்த புகைப்படம் வைரல் ஆனது. அதற்கு தற்போது ப்ரீத்தி ஜிந்தா தோனியுடன் அன்று என்ன பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கேப்டன் கூல் தோனிக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி. அனால் எனக்கு அவரது குட்டிப் பெண் ஸிவாவை பார்க்கும் போது அது போய்விடுகிறது. அவரிடம் கவனமாக இருங்கள்.. நான் அவளை ஒரு நாள் கடத்திச் சென்று விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications