Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லுல முதல் வாரத்துல நான் விளையாட மாட்டேன்... காகிசோ ரபடா சொல்லியிருக்காரு!

சென்னை : டெல்லி கேபிடல்ஸ் அணி தக்க வைத்துள்ள தென்னாப்பிரிக்க பௌலர் காகிசோ ரபடா. கடந்த சீசனில் இவர் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அணிக்காக தான் விளையாடவுள்ள பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் தேதிகளுடன் ஐபிஎல் 2021 சீசனும் நடைபெற்றால் தான் முதல் வாரத்தின் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்தியாவில் டெல்லி தனது சொந்த ஊர் போன்றது என்றும் கூறியுள்ளார்.

தேதிகள் அறிவிக்கப்படவில்லை

தேதிகள் அறிவிக்கப்படவில்லை

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பிசிசிஐ இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் ஐபிஎல் ஏலம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.

ரபடா தக்கவைப்பு

ரபடா தக்கவைப்பு

இந்நிலையில் முன்னதாக ஐபிஎல் ஏலத்திற்காக 8 ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை தக்கவைத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் சில வீரர்களை தக்க வைத்தது. அதில் தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபடாவும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் வழக்கமான தேதிகளில் ஆரம்பிக்கும் பட்சத்தில் தன்னால் முதல் வாரத்தில் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ரபடா திட்டவட்டம்

ரபடா திட்டவட்டம்

அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தான் அந்த தொடரில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தன்னுடைய நாட்டிற்கு முக்கியத்துவம் தரவேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரபடா மகிழ்ச்சி

ரபடா மகிழ்ச்சி

மேலும் டெல்லி அணிக்காக விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இந்தியாவில் டெல்லி தனது சொந்த ஊர் போன்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த சீசனில் சிற்பபான பௌலிங்கை தந்த ரபடா 17 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Friday, February 19, 2021, 12:07 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+