Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரண்டக்க ரண்டக்க.. பேசாம "டான்ஸ் ஷோ" நடத்திரலாம் போல.. குஷியில் கெய்ல்

சென்னை: என்னோட கிரிக்கெட் திறமையை விட என்னோட டான்ஸ் பற்றிதான் எனது ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்கள். பேசாமல் டான்ஸ் ஷோ ஒன்று நடத்தலாம் போல என்று ஜாலியாக கூறியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

உலகமெங்கும் அதிகம் ரசிக்கப்பட்ட ஆட்டக்காரர்கள் வரிசையில் கெய்லுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக இவருக்கு மேற்கு இந்தியத் தீவுகளை விட இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தியாவைத் தாக்கும் "புயல்"களில் "கெய்ல் புயலுக்கும்" தனி இடம் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் சென்னைக்கு வந்த கிறிஸ் கெய்ல், இங்கு ரசிகர்களின் அன்பில் சிக்கி திக்குமுக்காடிப் போய் விட்டார். மேலும் ரசிகைகளுடன் இணைந்து டான்ஸ் ஆடியும் உற்சாகமாக காணப்பட்டார்.

டிஎன்பிஎல் புரமோஷன்

டிஎன்பிஎல் புரமோஷன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை புரமோட் செய்வதற்காக வந்திருந்தார் கெய்ல். வந்த இடத்தில் டிஎன்பிஎல்லின் இணையதளத்திற்கு அவர் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், என்னுடைய கிரிக்கெட் திறமையை விட டான்ஸ் திறமை குறித்துத்தான் பலரும் பேசுகிறார்கள். இது மகிழ்ச்சி தருகிறது, உற்சாகம் தருகிறது.

டான்ஸ் ஷோ நடத்திடலாம்

டான்ஸ் ஷோ நடத்திடலாம்

ரசிகர்களுக்கு என்னுடைய டான்ஸ் பிடித்துள்ளது. பலரும் அதைப் பற்றித்தான் அதிகம் கேட்கிறார்கள். நானும் மேலும் சில மூவ்மென்ட்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அதை விரைவில் வெளிப்படுத்துவேன். ரசிகர்களின் ஆதரவைப் பார்க்கும்போது பேசாமல் ஒரு டான்ஸ் ஷோ நடத்தலாம் போல.

ரசிகர்களிடமிருந்தும் கற்கிறேன்

ரசிகர்களிடமிருந்தும் கற்கிறேன்

ரசிகர்கள் என்னை விட நன்றாகவே ஆடுகின்றனர். அவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். இது செம வேடிக்கையாகவும் இருக்கிறது. அவர்களிடமிருந்து கற்று அவர்களுடன் இணைந்து ஆடுவது வித்தியாசமானது என்றார் கெய்ல்.

கெய்ல் - பிராவோ

கெய்ல் - பிராவோ

கெய்ல் மட்டுமல்லாமல் வேயன் பிராவோவும் சென்னை வந்திருந்தார். இருவரும் டிஎன்பிஎல் தொடருக்கான புரமோஷனுக்காக வந்திருந்தனர். இந்திய ஐபிஎல் தொடரில் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் பிராவோ. கெய்ல் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கல்லூரியில் டான்ஸ்

மகளிர் கல்லூரியில் டான்ஸ்

முன்னதாக சென்னை வந்திருந்த கெய்ல், எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் இணைந்தும் டான்ஸ் போட்டார். அதுகுறித்து கேட்டபோது மாணவிகளின் அன்பு சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார் கெய்ல். மேலும் அவர் கூறுகையில் அவர்கள் போட்ட ஆட்டத்தையும், சத்தத்தையும் பார்த்து எனக்கு காது ஜவ்வே கிழிந்து விடும் போல இருந்தது. அப்படி ஒரு சத்தம் போட்டு உற்சாகமாக ஆடினார்கள் என்றார்.

Story first published: Friday, September 9, 2016, 15:33 [IST]
Other articles published on Sep 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+