Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஸ்லாமிய வீரர்களுக்கு முன்னுரிமை.. மூத்த வீரர் மீது பரபரப்பு புகார்.. ஆதாரங்களுடன் தரமான பதிலடி

டேராடூன்: முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மத வேறுபாடு காட்டியதாக உத்தரகாண்ட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடருக்கு வீரர்களை தேர்வு செய்ததில் ஜாபர் வேறுபாடு காட்டியதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வாசிம் ஜாபர் பதவி விலகி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் ஜாபர்.

தற்போது பல்வேறு அணிக்கு பயிற்சி வழங்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இவரின் பயிற்சியின் கீழ் உத்தரகாண்ட் அணி விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஆடியது. ஆனால் அதில் உத்தரகாண்ட் சிறப்பாக செயல்படவில்லை. இந்த நிலையில் தற்போது உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜாபர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

விளக்கம்

விளக்கம்

இதற்கு காரணம் கூறியுள்ள ஜாபர், உத்தரகாண்ட் அணியில் திறமையான வீரர்களுக்கு மதிப்பில்லை. பழைய வீரர்களை மட்டுமே எடுக்கிறார்கள். அணி தேர்வில் பாகுபாடு காட்டப்படுகிறது. கேப்டன் தொடங்கி வீரர்கள் வரை எதுவும் சரியில்லை. தேர்வு வாரியம் முறையின்றி செயல்படுகிறது.

அணி தேர்வு

அணி தேர்வு

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இனியும் இந்த அணியின் பயிற்சியாளராக நீடிக்க முடியாது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் உத்தரகாண்ட் அணி தோல்வி அடைந்ததும் கூட மோசமான அணி தேர்வால்தான், என்று கூறி உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜாபர் வெளியேறி உள்ளார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மத வேறுபாடு காட்டியதாக உத்தரகாண்ட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடருக்கு வீரர்களை தேர்வு செய்ததில் ஜாபர் வேறுபாடு காட்டியதாகவும், மத ரீதியாக சில வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்வாகம்

நிர்வாகம்

இந்த நிலையில் இதற்கு ஜாபர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில், நான் மத ரீதியான வேறுபாடு காட்டவில்லை. உத்தரகாண்ட் அணியின் கேப்டனாக ஜெ பிஸ்தாவை நியமிக்க வேண்டும் என்று நான்தான் கூறினேன். இஃபாலை நியமிக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியது.

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

இஸ்லாமிய வீரர்களை அணியில் நான் எடுத்து முன்னுரிமை கொடுக்கவில்லை. அணி தேர்வாளர்கள் பாகுபாடு காட்டியதால் நான் வெளியேறினேன். சீக்கிய மத ரீதியான வாசகம் ஒன்றை தேர்வு செய்ய உத்தாரகாண்ட் அணி நினைத்தது. நான் கோ உத்தரகாண்ட் என்ற வாசகத்தை பயன்படுத்த சொன்னேன்.

இல்லை

இல்லை

இதை தவிர நான் வேறு எதுவும் சொல்லவில்லை. நான் மத ரீதியாக செயல்பட்டு இருந்தால் அவர்கள் என்னை நீக்கி இருப்பார்கள். நானாகத்தான் வெளியேறினேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உத்தரகாண்ட் அணி தேர்வில் நிறைய குளறுபடி நடக்கிறது என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார் .

Story first published: Thursday, February 11, 2021, 9:49 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+