Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிக்கறதுக்காக திட்டம் போடல... ஆனா ஜெயிக்கும் வழிகளை திட்டமிட்டேன்.. ரபடா விளக்கம்

துபாய் : கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சூப்பர் ஓவரில டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலர் காகிசோ ரபடா வெற்றி நாயகனாக இருந்து சூப்பர் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இந்நிலையில் தான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்றும் ஆனால் வெற்றிக்கான வழிகளை திட்டமிட்டதாகவும் ரபடா தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்சின் வெற்றி

டெல்லி கேபிடல்சின் வெற்றி

இரு தினங்களுக்கு முன்பு பரபரப்பாக நடந்து முடிந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளுக்கும் இடையில் போட்டி டிரா ஆன நிலையில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலர் காகிசோ ரபடா முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

பந்து வீசிய ரபடா

பந்து வீசிய ரபடா

சூப்பர் ஓவரில் பந்துவீசிய ரபடா பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் தொடர்ந்து நிகோலஸ் பூரன் ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பியதோடு ஸ்கோரை இரண்டாக சுருக்கினார். இதையடுத்து 3 ரன்களில் வெற்றியை டெல்லி கேபிடல்ஸ் அணி எளிதாக உறுதி செய்தது.

எதையும் திட்டமிடவில்லை

எதையும் திட்டமிடவில்லை

இந்நிலையில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளதாக காகிசோ ரபடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் எதையும் திட்டமிடவில்லை என்றும் வெற்றிக்காக எதையும் மெனக்கெட்டு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் வெற்றி பெறும் வழிகளை ஆராய்ந்து மேற்கொண்டதாகவும், அதை சூப்பர் ஓவரில் செய்து முடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியில் எதிர்கொண்ட போட்டி

நெருக்கடியில் எதிர்கொண்ட போட்டி

மேலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டாயினிசிற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விட்டதை தான் தொடர்ந்து மேற்கொண்டு வெற்றியை உறுதி செய்ததாகவும் ரபடா தெரிவித்துள்ளார். அணியின் முதல் போட்டியிலேயே மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் போட்டியை எதிர்கொண்டது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Tuesday, September 22, 2020, 20:20 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+