நான் ரெடி.. ஒரு கை பாக்கலாம்னு இருக்கேன்..! உலக கோப்பை தொடருக்காக காத்திருக்கும் தமிழக வீரர்
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த இடத்தில் களம் இறங்கினாலும் சாதிக்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார்.
உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் மோதுகின்றன.
அதனால் போட்டியை கண்டுகளிக்க ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத ஆர்வத்தில் உள்ளனர். இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன.

தேர்வுக்குழு அறிவிப்பு
இந்திய அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் அபாரமாக இருக்கிறது. அணியில் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பராக யார் தேர்வாக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4ம் வரிசையை மனதில் கொண்டு, விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்தது தேர்வுக்குழு.

தயாராக இருக்கிறேன்
இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சாதிக்க தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நான் எதற்கும் தயாராக இருக்கும் போர்க் குணம் கொண்டவன்.

முக்கியமல்ல
உலக கோப்பை தொடர் கடுமையான சவால் நிறைந்ததாக இருக்கும். 4வது இடத்தில் களமிறங்க வேண்டியிருக்கும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது என்பதை நன்றாக உணர்வேன். என்னை பொறுத்தவரையில் எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்
அதில் எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம். நாட்டுக்காக விளையாடும் போது அதுவே அதிக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றார். பல முன்னாள் ஜாம்பவான்களும், விஜய் சங்கருக்கு பதில் ரிஷப் பன்ட்டை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறி வருவது தனிக்கதை.


Click it and Unblock the Notifications