Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காப்பா போட்டியில சதமடிக்க ரொம்ப ஆசையா இருந்தேன்... ஆனா பதற்றத்தால தவறிடுச்சு... கில் வெளிப்படை!

காப்பா : கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோதிய இந்திய அணி தொடரை சிறப்பான வகையில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் இறுதிப்போட்டி காப்பாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய சுப்மன் கில் 91 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 90 ரன்களை அடித்த நிலையில் தான் பதற்றமடைந்ததாகவும் ஆனால் சதமடிக்க தான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் கில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி கொண்ட இந்தியா

வெற்றி கொண்ட இந்தியா

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு இந்திய அணி இரண்டாவது முறையாக இமாலய சாதனை புரிந்துள்ளது. இந்த தொடரில் அனைத்து வீரர்களுமே தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றனர்.

91 ரன்களை குவித்த கில்

91 ரன்களை குவித்த கில்

இந்த தொடரில் 21 வயது சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக காப்பாவில் நடைபெற்ற இறுதி மற்றும் 4வது போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் 91 ரன்களை அடித்தார். அவர் சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

ஆயினும் அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் 328 ரன்கள் இலக்கை அடைவதற்கு கில்லின் இந்த ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அந்த போட்டியில் தான் சதமடிக்க அதிக விருப்பத்துடன் இருந்ததாக கில் குறிப்பிட்டுள்ளார். அதை தன்னால் சாதிக்க முடியும் என்றும் தான் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அவுட்டான கில்

அவுட்டான கில்

ஆனால் 90 ரன்களை அடித்தவுடன் தனக்கு சிறிதளவு பதற்றம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து தாகத்திற்கு பானங்கள் கேட்க விரும்பினேன். ஆனால் அந்த ஓவரிலேயே தான் அவுட்டானேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த ஐபிஎல் சீசனில் கேகேஆர் அணிக்காக விளையாடவுள்ளார் சுப்மன் கில்.

Story first published: Tuesday, April 6, 2021, 14:38 [IST]
Other articles published on Apr 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+