இவரை தான் புதிய கோச்சாக அறிவிக்க இருக்கோம்..! ரெக்கமண்ட் பண்ணிய கபில்தேவ்.. வேற ஆளே இல்லியா?
மும்பை: ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர பரிந்துரை செய்திருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஓபனாக அறிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் அண்மையில் நிறைவடைந்த உலக கோப்பையுடன் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக, அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 30ம் தேதி வரை இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 2,000 விண்ணப்பங்கள் வந்ததாக சொல்லப்பட்டது.

பயிற்சியாளர் யார்?
அந்த விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு ஆழ்ந்து பரிசீலித்தது. இது குறித்து, முன்னாள் கேப்டன் கபில் தேவ் யார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பதை சூசகமாக அறிவித்திருக்கிறார்.

6 பேர் பட்டியல்
அவர் கூறியிருப்பதாவது: பயிற்சியாளர் பதவிக்கு வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களில் இறுதியாக நாங்கள் பட்டியலிட்டு பார்த்தோம். அதன்படி 6 பேர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி விழுக்காடு
இருப்பினும் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வெற்றி விழுக்காடு என்பது அதிகம். அவரது தலைமையில், பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.

எனது பரிந்துரை
அதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் சக உறுப்பினர்களோடு ஆலோசனை செய்தேன். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவரை பயிற்சியாளராகவும் பரிந்துரை செய்கிறேன்.

அணி பலப்படும்
மேலும் கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு இந்திய அணியை பலப் படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். அதனால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர நான் பரிந்துரை செய்கிறேன் என்று கபில் தேவ் கூறினார்.


Click it and Unblock the Notifications