Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாவுடன் மகனை ஒப்பிடுவது தவறு.. மகனும் ஒரு நாள் அப்பா ஆவான்.. கபில் அலேக் பேச்சு!

டெல்லி: சச்சின் டெண்டுல்கர் குறித்து எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அவர் எப்படி விளையாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைத்தேனோ அதையே சொன்னேன் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

மேலும் விராத் கோஹ்லியை டோணியுடன் ஒப்பிடக் கூடாது. அப்பா அப்பாதான், மகன் மகன்தான், இருவரையும் ஒப்பிடக் கூடாது என்றும் கூறினார் கபில்தேவ்.

இதுதொடர்பாக கபில் தேவ் அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

அப்பா வேற.. மகன் வேற

அப்பா வேற.. மகன் வேற

அப்பாவுடன் மகனை ஒப்பிடக் கூடாது, மகனுடன் அப்பாவை ஒப்பிடக் கூடாது. அப்பா அப்பாதன், மகன் மகன்தான். அதுபோலத்தான் டோணியை, கோஹ்லியுடன் ஒப்பிடுவது. அது தேவையற்றது. அப்பா அப்பாவாக இருக்கட்டும், மகன் மகனாக இருக்கட்டும்.

மகனும் ஒரு நாள் அப்பா ஆவான்

மகனும் ஒரு நாள் அப்பா ஆவான்

மகனும் வளர்ந்து ஒரு நாள் அப்பா ஆவார். ஆனால் இன்று யார் தந்தையோ, அவர் அவராகவே இருக்கட்டும். அவரை மகனுடன் ஒப்பிடக் கூடாது. ஒப்பிடாதீர்கள்.

சாஸ்திரிக்கு ஆதரவு

சாஸ்திரிக்கு ஆதரவு

மும்பை பிட்ச் தொடர்பாக ரவி சாஸ்திரியின் கருத்துக்கு நான் ஆதரவாக இருக்கிறேன். உங்களது நாட்டில் விளையாடும்போது, உங்களுக்குப் பொருத்தமான பிட்ச்தான் தரப்பட வேண்டும். உங்களது பவுலர்களுக்கு சாதகமான பிட்ச் தரப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அது தவறுதான்.

தப்புதான்

தப்புதான்

வெளிநாட்டு அணியை இரு கரம் கூப்பி, அணைத்து வரவேற்க விரும்பினால் அது உங்களது விருப்பம். ஆனால் பிட்ச்சையும் அவர்களுக்கு சாதகமாக போட்டால் அது தவறு. அது அணியைப் பாதிக்கும். வீரர்களைப் பாதிக்கும். என்னைப் போன்றவர்களையும் அது பாதிக்கும். ரவி சாஸ்திரியும் பாதிக்கப்பட்டதால்தான் அதுகுறித்து கேட்டுள்ளார்.

அவங்க செய்வாங்களா

அவங்க செய்வாங்களா

தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக இந்தியாவில் பிட்ச் போடப்படுவது போல இந்தியாவுக்கு சாதகமாக அவர்கள் பிட்ச் போட்டுத் தருவார்களா. இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார் கபில் தேவ்.

சச்சின் கருத்து

சச்சின் கருத்து

சச்சின் குறித்து கூறியது குறித்த கேள்விக்கு கபில் பதிலளிக்கையில் நான் சச்சின் குறித்து சரியாகத்தான் பேசினேன். தவறாகப் பேசவில்லை. அவர் எப்படி விளையாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்பதைத்தான் கூறினேன். அதில் தவறு இல்லை. உண்மையில் நான் சச்சினைப் பாராட்டித்தான் பேசினேன்.

Story first published: Wednesday, November 4, 2015, 11:42 [IST]
Other articles published on Nov 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+