"அமிதாப்பைப் பார்த்தா சிவாஜி மாதிரி இல்லை.. கோஹ்லியைப் பார்த்தாதான் மரடோனா போல இருக்கு..!"
கொல்கத்தா: எனக்கு விராத் கோஹ்லியைப் பார்த்தால் பாதி மரடோனாவைப் பார்ப்பது போலவே இருக்கிறது என்று கூறியுள்ளார முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.
அமிதாப் பச்சனைப் பார்த்தால் சிவாஜி போலவே இருக்கிறது என்று விக்ரம் பிரபு ஒரு விளம்பரத்தில் கூறினார். இந்திரா காந்தியை குஷ்பு ரூபத்தில் பார்க்கிறேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். இப்படி ஆளாளுக்கு கலாய்க்கிறார்களா, சீரியஸாகப் பேசுகிறார்களே என்று தெரியாத அளவுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது கங்குலியும் இணைந்துள்ளார். கோஹ்லியைப் பார்த்தால் பாதி மரடோனாவைப் பார்ப்பது போல உள்ளதாக கூறியுள்ளார் கங்குலி.

எனக்குப் பிடிச்ச மரடோனா
எனக்கு மரடோனா்வைப் பிடிக்கும். எனது ஆதர்ச ஹீரோவும் அவர்தான். அவர் கால்பந்து விளையாடும்போது இதயத்திலிருந்து நேசித்து விளையாடுவார்.

அதே மாதிரி இருக்காப்ல கோஹ்லியும்
கிட்டத்தட்ட கோஹ்லியிடமும் அதே கேரக்டர் உள்ளது. கிரிக்கெட்டை அவ்வளவு நேசிக்கிறார் கோஹ்லி. அவரது பாடி லாங்குவேஜ் அபாரமாக இருக்கிறது.

பெரிய ரசிகர் பாஸ் நான்
நான் விரோத் கோஹ்லியின் மிகப் பெரிய ரசிகன். பீல்டுக்கு வெளியிலும் அவர் அற்புதமான மனிதர். நேசிப்புக்குரிய மனிதர். அவரிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.

வெல்லும் வெறி.. அது .. அதுதான்!
கோஹ்லியிடம் வெற்றி பெறும் வெறி உள்ளது. அதுதான் எனக்குப் பிடித்துள்ளது. அது இருக்க வேண்டும். ஒரு கேப்டனிடம் அது மட்டுமே இருக்க வேண்டும்.

கேப்டனாக நான்கு சதம்
தான் கேப்டனாக பணியாற்றிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சதம் போட்டுள்ளார். இது அபாரமானது. சிறப்பானது என்றார் கங்குலி.


Click it and Unblock the Notifications