For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குதிரை மேய்த்தது சீக்ரெட் ஆப் மை எனர்ஜி.. இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா பூரிப்பு

By Veera Kumar

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாத நிலையில், இழந்த தன்னுடைய தன்னம்பிக்கையை மீட்க குதிரைகளுடன் நேரத்தை செலவிட்டதாக கூறியுள்ளார் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக சுமார் 4 மாத இடைவேளைக்கு பிறகு ஜடேஜா புது தெம்போடு இந்திய அணிக்குள் வருகிறார்.

மீண்டும் ஜடேஜா

மீண்டும் ஜடேஜா

வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜடேஜாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

ரஞ்சியில் அபாரம்

ரஞ்சியில் அபாரம்

ஜடேஜாவுக்கு மீண்டும் அணியில் இடம்கிடைக்க அவர் ரஞ்சி கோப்பை தொடரில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதே காரணம். சவுராஷ்டிரா அணிக்காக ஆடும் ஜடேஜா, வெறும் 2 போட்டிகளில், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2 அரை சதங்கள் கடந்துள்ளார்.

ப்ரெஷ்

ப்ரெஷ்

இதுகுறித்து ஜடேஜா கூறுகையில், நான் கடந்த நான்கு மாதங்களாகவே நான் கிரிக்கெட் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ரஞ்சி கோப்பைக்கு முன்பாக கிரிக்கெட் பற்றி நினைக்க கூடாது. ஃபிரெஷ்ஷாக வர வேண்டும் என்று திட்டமிட்டு எனது பண்ணைக்கு சென்றேன்.

குதிரைகளோடு கொஞ்சல்

குதிரைகளோடு கொஞ்சல்

பண்ணையில் குதிரைகளோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வீடுகளுக்கு சென்றேன். சேர்ந்து ஊர் சுற்றினேன். இசை கேட்டேன். பேட்டையோ, பந்தையோ கையால் கூட தொடவில்லை. எனவேதான் ரஞ்சியில் சிறப்பாக ஆட முடிந்தது. இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 21, 2015, 11:58 [IST]
Other articles published on Oct 21, 2015
English summary
After being dropped from the Indian team in June, all-rounder Ravindra Jadeja stayed away from cricket for a couple of months, the left-hander has revealed today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+