Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பவும் முதல்ல இருந்தா.. நான் இன்னும் அதைப்பற்றி யோசிக்க கூட இல்லங்க..இதுலாம் நியாயமா ஆண்டர்சன்!

லண்டன்: ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஓய்வு பற்றிய கேள்விக்கு முன்னணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னணி ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 21 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் ஆண்டர்சன், 182 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 35 வயதிற்கு மேல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வேலையே இல்லை என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், சுமார் 41 வயதிலும் ஆண்டர்சனின் ஆர்வம் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

I still didnt even think about retirement from cricket says England Bowler James Anderson

கடந்த ஆஷஸ் தொடர் முடிவடைந்த போது ஓய்வை பற்றிய கேள்விக்கு ஆண்டர்சன், எனக்கு ஓய்வு பெறுவதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பார். இந்த பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இதே போன்ற பதிலை தான் ஆண்டர்சன் இந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவும் கூறியுள்ளார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து ஆண்டர்சன்.

அப்போது ஆண்டர்சன் பேசுகையில், நான் இப்போதும் நன்றாகவே பந்துவீசுவதாக உணர்கிறேன். நிச்சயம் நான் எதிர்பார்த்த அளவிற்கான விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்கிலாந்து அணியில் நான் சேர்க்கப்படுவேனா என்ற கேள்விகள் வந்துகொண்டே இருந்தது. தற்போது எனது எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எதிர்கொண்டு வருகிறேன்.

I still didnt even think about retirement from cricket says England Bowler James Anderson

ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி நடப்பதால், இதுபோன்ற கேள்விகள் வருவது சாதாரணம். ஆனால் நான் எனது கேப்டன் மற்றும் பயிற்சியாளருடன் தொடர்ந்து உரையாடுகிறேன். நான் விளையாடுவதற்கான பசியுடன் இருக்கும் வரை என்னை விளையாட அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்பும் வரை அணியில் இருப்பேன் என்று கூறியுள்ளனர். என்னால் இன்னும் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று இந்த நிமிடம் வரை நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

4வது ஆஷஸ் போட்டியில் சிறப்பாக பந்துவீசினேன் என்றே நினைக்கிறேன். நான் மீண்டும் அடுத்த போட்டியில் பந்துவீசும் போது, இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன். ஆஷஸ் தொடரில் எப்போது ஒன்று அல்லது இரு வீரர்களுக்கு மோசமாக அமையும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி நான் இன்னும் சிந்திக்க கூட இல்லை என்று கூறியுள்ளார். இந்த ஆஷஸ் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 27, 2023, 14:06 [IST]
Other articles published on Jul 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+