For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் போட்டிகள்ல விளையாட தற்போதும் விருப்பத்துடன் இருக்கிறேன்... டெஸ்ட் கிங் ஆசை!

சென்னை : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் சத்தீஸ்வர் புஜாரா.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள புஜாரா, சென்னையில் குவாரன்டைனில் உள்ளார்.

இதனிடையே, ஒருநாள் போட்டிகளில் விளையாட தான் தற்போதும் ஆர்வத்துடன் உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.

சிறப்பான புஜாரா

சிறப்பான புஜாரா

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் டெஸ்ட் கிங் சத்தீஸ்வர் புஜாரா. குறிப்பாக 2 இறுதி போட்டிகளிலும் இவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.

சிறப்பான இடம் இல்லை

சிறப்பான இடம் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இவருக்கு சரியான இடம் இல்லை. கடந்த ஐபிஎல் தொடரிலும் இவர் பங்கேற்வில்லை. ஒருநாள் போட்டிகளிலும் கடந்த 2013 ஆகஸ்ட் மாதத்தில்தான் தனது இறுதி போட்டியை விளையாடினார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார்.

புஜாரா வெளிப்படை

புஜாரா வெளிப்படை

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஆர்வம் தற்போதும் தனக்கு உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் டுடேவின் யூடியூப் பக்கத்தில் பேசிய புஜாரா, ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காததால் தனக்கு தொடர்ந்து பயிற்சிகள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

புஜாரா ஆதங்கம்

புஜாரா ஆதங்கம்

கொரோனா காரணமாக சரியான பயிற்சி இல்லாத நிலையில் மற்ற வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சி கிடைத்ததை சுட்டிக் காட்டிய புஜாரா, தான் நேரிடையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் தடுமாறினாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் சரியான பேட்டிங்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Story first published: Friday, January 29, 2021, 22:21 [IST]
Other articles published on Jan 29, 2021
English summary
After the lockdown I didn't have any match practice before the Australia tour -Pujara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+