Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி

சென்னை : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வடிவங்களிலான தொடர்களில் தனது அறிமுக போட்டிகளை விளையாடினார் நடராஜன்.

இதனிடையே டி20 வெற்றி கோப்பையை கேப்டன் விராட் கோலி தன்னிடம் கொடுத்ததும் தான் கண் கலங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 தொடர்களில் இந்தியா வெற்றி

2 தொடர்களில் இந்தியா வெற்றி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களிலான தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியாவும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பான பௌலர் நடராஜன்

சிறப்பான பௌலர் நடராஜன்

இந்த 3 தொடர்களிலும் தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய அறிமுக போட்டிகளை விளையாடினார். குறிப்பாக டி20 தொடரின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு மிகுதியாக இருந்தது. இந்நிலையில் இந்த வெற்றிகளை அடுத்து நாடு

திரும்பியுள்ள நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன்னை தேர்வு செய்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக ஆட்டம்

அறிமுக ஆட்டம்

ஒரே தொடரில் 3 வடிவங்களிலும் தன்னுடைய அறிமுக ஆட்டத்தை ஆடியுள்ள ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள நடராஜன், வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்ட நிலையில் டி20 தொடரில் இணைக்கப்பட்டார். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் எடுத்த முதல் விக்கெட் அதையடுத்து நடைபெற்ற அனைத்தும் தனக்கு கனவு போல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடராஜனிடம் கொடுத்த கோலி

நடராஜனிடம் கொடுத்த கோலி

டி20 தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார் நடராஜன். டி20 தொடரை இந்தியா வெற்றி கொண்டது. இதையடுத்து வெற்றிக் கோப்பையை கேப்டன் விராட் கோலி நடராஜனிடம் கொடுத்தார். இதனிடையே, இதை தான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்த நடராஜன், இந்த தருணம் தனக்கு கண்ணீரை வரவழைத்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Story first published: Monday, January 25, 2021, 14:18 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+