Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை மனசுல நினைச்சேன்.. தாவிப்போய் கேட்ச் பிடிச்சேன்.. இவரா இப்படி சொல்றாரு.. நம்ப முடியலையே

டெல்லி:தோனியை மனதில் நினைத்துக் கொண்டதால் கிளாசனின் கேட்சை பிடிக்க முடிந்தது என்று ரிஷப் பன்ட் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களை அடித்தார். மேலும், துவக்க வீரர் தவான் 50 ரன்களை அடித்தார்.

16 ரன்களில் தோல்வி

16 ரன்களில் தோல்வி

அதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே அடித்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.

போராடி தோல்வி

போராடி தோல்வி

போட்டியில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய பெங்களூரு அணியில் துவக்கம் சரியாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. போட்டியில் பெங்களூரு அணி வீரரான கிளாசனை பன்ட் அருமையாக கேட்ச் செய்து வெளியேற்றினார்.

ஸ்கூப் ஷாட் முயற்சி

ஸ்கூப் ஷாட் முயற்சி

கிளாசன் அடித்த பந்தினை தோனி போன்று கணித்து துரிதமாக செயல்பட்டு கேட்ச் செய்தார். அதாவது, ஸ்கூப் ஷாட் ஆட நினைத்த கிளாசன் பந்தினை ஸ்கூப் செய்ய முயன்றார்.

அபாரமாக பிடித்த பன்ட்

அபாரமாக பிடித்த பன்ட்

ஆனால் அந்த பந்து முதலில் பேட்டில் பட்டு, பின்னர் ஹெல்மட்டில் பட்டு பந்து சற்று உயரே பறந்தது அதனை கண்ட கீப்பர் பன்ட் உடனே பாய்ந்து சென்னு அந்த பந்தை பிடித்தார். அவரது இந்த கேட்ச் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உள்ளது.

தோனியின் நினைவு

தோனியின் நினைவு

இது குறித்து ரிஷப் பன்ட் கூறியதாவது:ஆட்டத்தின் அந்த தருணத்தில் தோனியை மனதில் நினைத்துக் கொண்டேன். அவர் எப்படி சிந்திப்பாரோ அப்படியே நானும் என்னுள் நினைத்து அந்த கேட்சை பிடித்தேன் என்றார். ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பிங்கை மேம்படுத்த வேண்டும்,அதனால் தான் அவர் உலகக்கோப்பை அனியில் இல்லை என எம்எஸ்கே பிரசாத் கூறியிருப்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, April 29, 2019, 12:07 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+