சரித்தான்.. அப்படின்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.. டோணி குறித்து ரஹானே கருத்து!
மும்பை: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எனது பேட்டிங் ஸ்டைல் குறித்து கேப்டன் டோணி சற்று கடுமையான கருத்துக்களைக் கூறினாலும் கூட நான் அதை கடுமையான விமர்சனமாக எடுத்துக் கொள்ளவில்லை. பாசிட்டிவாகவே அதை எடுத்துக் கொண்டேன் என்று ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.
வங்கதேச தொடரினா்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி இரு போட்டிகளில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் ரஹானேவுக்கு ஸ்டிரைக் ஆடுவதில் சிரமம் உள்ளது. அவர் தடுமாறுகிறார் என்று காரணம் கூறியிருந்தார்.
ஆனால் இந்தப் பஞ்சாயத்து முடிந்த ஒரே வாரத்தில் அவரை ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். இது பெரும் சலசலப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வங்கதேச தொடரின்போது டோணி தன்னிடம் கூறியது குறித்து பேசியுள்ளார் ரஹானே. அதிலிருந்து...

பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன்
டோணி பாய் கூறியதை நான் பாசிட்டிவாகவே எடு்த்துக் கொண்டேன். அதிலிருந்து விடுபட்டு விட்டேன். வங்கதேச டூர் தற்போது முடிந்து போன ஒன்று.

நிலையாக ஆட வேண்டும்
ஒரு நாள் போட்டிகளில் நிலையாக, ஸ்திரமாக ஆட வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இப்போது இருக்கிறது.

சீனியராவது, ஜூனியராவது
வீரர்களை வீரர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக ஜூனியர்கள், சீனியர்கள் என்று பார்க்கக் கூடாது. 15 வீரர்களுமே முக்கியமானவர்கள்தான். அவர்களது திறமையை மதிக்க வேண்டும்.

எல்லோரும் ஆதரவாக உள்ளனர்
எனக்கு அனைத்து வீரர்களும் ஆதரவாக உள்ளனர். ஒரு கேப்டனாக, எனக்கென்று சில ஐடியாக்கள் உள்ளன. அதற்கேற்ப நான் விளையாடுவேன் என்றார் ரஹானே.

பஜ்ஜுப்பா...!
தொடர்ந்து ரஹானே கூறுகையில், பஜ்ஜுப்பா (அதாவது ஹர்பஜன் சிங்), எப்போதுமே இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர். அவர் அணியில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தேவைப்படும்போது அவரது ஆலோசனைகளைப் பெறுவேன். அவரது அனுபவம் அணிக்கு உதவும்.

பெஸ்ட்டாக ஆடுவோம்
199 சதவீத ஆயத்த நிலையில் நாங்கள் இருக்கிறோம். சிறப்பாக ஆடுவோம். சிறந்த வெற்றிகளுடன் திரும்பி வருவோம். கடந்த காலத்தை மறந்து விட்டு ஜிம்பாப்வே தொடருக்காக அனைவரும் மனதளவில் தயாராகி விட்டனர் என்றார் ரஹானே.


Click it and Unblock the Notifications