For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உன்னை நம்புறேன்.. கடைசி நொடியில் சிராஜுக்கு அஸ்வின் கொடுத்த "வார்னிங்".. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் நேற்று அஸ்வின் அடித்த சதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் சிராஜ் அடித்த இரண்டு சிக்ஸர்களும் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

Recommended Video

கடைசி நொடியில் Siraj-க்கு Ashwin கொடுத்த 'வார்னிங்'

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் அஸ்வின் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் நேற்று அஸ்வின் அடித்த சதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுவும் கடைசி ஒரு விக்கெட் மீது இருந்த நிலையில் இவர் அடித்த திரில் சதம் ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. நேற்று அஸ்வின் சதம் அடித்த போது சிராஜ்தான் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

விக்கெட்

விக்கெட்

விக்கெட்டை இழக்காமல் சிராஜ் மிகவும் பொறுப்பாக ஆடினார். அஸ்வின் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சிராஜ் ஸ்டிரைக் எடுக்காமல் சிங்கிள் அடித்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அஸ்வின் சதம் அடித்த பின் சிராஜுக்கு தைரியமாக ஸ்டிரைக் கொடுத்தார்.

பேட்டிங்

பேட்டிங்

இப்போது நீ பேட்டிங் செய் என்று அஸ்வின் சிராஜிடம் கூறினார். சிராஜுக்கு ஸ்டிரைக் கொடுத்துவிட்டு.. உன்னை நான் நம்புகிறேன். அதனால்தான் சிங்கிள் கொடுத்தேன். கவனமாக ஆடு என்று சிராஜுக்கு அஸ்வின் வார்னிங் கொடுத்தார். கவனமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் ரன் அடிக்கலாம் என்பது போல அஸ்வின் குறிப்பிட்டார்.

சிராஜ் பதிலடி

சிராஜ் பதிலடி

இந்த நிலையில் அஸ்வின் கொடுத்த வார்னிங் பற்றியெல்லாம் சிராஜ் கொஞ்சம் கூட கவலையே படவில்லை. அடுத்த பந்திலேயே சிராஜ் மிட் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த பந்தில் மீண்டும் சிராஜ் சிக்ஸ் அடித்து அசத்தினார். இப்படி சிராஜ் அடித்த சிக்ஸ்களை பார்த்து அஸ்வினே ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

என்ன நடந்தது

இந்த நிலையில் சிராஜ் குறித்து அஸ்வின் அளித்த பேட்டியில், இதற்கு முன் நான் இதேபோல் சதம் அடிக்கும் போது இஷாந்த் சர்மாவுடன் பேட்டிங் செய்து இருக்கிறேன். இப்போது சிராஜ் உடன் பேட்டிங் செய்தேன். இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். சிராஜ் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்.

திரில்

திரில்

அவரின் பேட்டிங்கை பார்க்க திரில்லாக இருந்தது. அவர் என்னுடைய சதத்தை கொண்டாடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. அணியில் எல்லா வீரர்களும் மிகவும் திரில்லாக உணர்ந்தார்கள். எனக்கு சென்னை ரசிகர்கள் மிகவும் சப்போர்ட்டாக இருந்தார்கள் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 10:01 [IST]
Other articles published on Feb 16, 2021
English summary
I trust you say Ashwin to Siraj after his century in India vs England second test yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+