Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறணும்... ஆசையை வெளிப்படுத்திய அக்தர்

கராச்சி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இதையடுத்து அடுத்ததாக இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியா வெல்ல வேண்டும்

இந்தியா வெல்ல வேண்டும்

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த பகலிரவு போட்டியில் மோசமான தோல்வியை அடைந்துள்ள இந்திய அணி மிகச் சிறப்பாக தன்னுடைய தன்னம்பிக்கையை இரண்டாவது போட்டியில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

ஒரு போட்டியில் மோசமான தோல்வியை அடைந்து அடுத்த போட்டியில் சிறப்பாக வெற்றி பெறுவது அணி மற்றும் நிர்வாகத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இத்தகைய மோசமான தோல்வியை அளிக்க முடியும் என்று யாராவது நினைத்து பார்த்திருக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூலான கேப்டன்

கூலான கேப்டன்

இதையடுத்து ரஹானேவின் கேப்டன்ஷிப்பை பாராட்டிய அக்தர், ரஹானே மிகவும் பொறுமையானவர், மைதானத்தில் கத்துவது மோசமான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை அவர் செய்வதில்லை. அமைதியாக கூலாக தன்னுடைய கேப்டன்ஷிப்பை அவர் மேற்கொள்கிறார். அவரது தலைமையின்கீழ் இந்திய வீரர்களின் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, January 1, 2021, 12:53 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+