Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னைய விட... எனக்கும் மேல.. கோஹ்லியிடம் ரொம்பவே எதிர்பார்க்கும் கங்குலி!

மும்பை: விராத் கோஹ்லியிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன். ஒரு கேப்டனாக என்னை விட அவர் பெட்டராக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் "முன்னாள் கோஹ்லி" சவுரவ் கங்குலி.

அடுத்த கங்குலி என்று கோஹ்லியை வர்ணித்து வருகின்னர் ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும். கோஹ்லியும் அப்படித்தான் தடாலடியாக, அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் சில முன்னாள் வீரர்களோ இப்படியெல்லாம் அதிரடியா இருக்கப்படாது.. நிதானமாக செயல்பட வேண்டும் என்று அட்வைஸையும் கொட்டி வருகின்றனர். ஆனால் கங்குலியோ, தன்னை விட பெட்டராக கோஹ்லி செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் கோஹ்லி காட்டும் ஆக்ரோஷம், வெற்றி வெறி பிடித்த மன நிலை தன்னை ரொம்பவே "லைக்" செய்துள்ளதாக அவர் சிலாகித்துக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து....

பெரிய்ய விசிறி பாஸ்

பெரிய்ய விசிறி பாஸ்

நான் கோஹ்லியின் மிகப் பெரிய ரசிகன். எப்போதும் மைதானத்தில் வெல்லும் வேட்கையுடன் இருக்கிறார் கோஹ்லி. அந்த எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது.. I love that passion...!

ஆக்ரோஷம் பிடிச்சிருக்கு

ஆக்ரோஷம் பிடிச்சிருக்கு

அவரது அந்த எண்ணம் மட்டுமல்ல அவரது ஆக்ரோஷமும் எனக்குப் பிடித்திருக்கிறது. சில நேரங்களில் அவர் தோற்கலாம். சில நேரங்களில் வெல்லலாம்... ஆனால் அவர் வெல்வதற்காகவே விளையாடுகிறார்.

ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி

ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி

அப்படிப்பட்ட வெற்றி வேட்கையுடன் (வெறின்னு கூட சொல்லலாம் கங்குலிஜி) ஒரு கேப்டன் தனது அணியை வழி நடத்துவது பெருமையானதாகும். ஆனால் ஒரு கேப்டனாக அவர் என்னை விட பெட்டராக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

சவால் இனிமேல்தான் மச்சி

சவால் இனிமேல்தான் மச்சி

ஆனால் அவரது முக்கியமான சவாலே வெளிநாடுகளுக்குப் போகும்போதுதான் இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்குப் போகும்போது அந்த அணிகள் அவரது கேப்டன் திறமையை கண்டிப்பாக பரிசோதிக்கும்.

ஆல் தி பெஸ்ட் ராஜா

ஆல் தி பெஸ்ட் ராஜா

தென் ஆப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகி வருகிறார் கோஹ்லி. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென் ஆப்பிரிக்க அணி வலிமையானது என்பதில் சந்தேகம் இல்லை.

செம போட்டியாக இருக்கும்

செம போட்டியாக இருக்கும்

தென் ஆப்பிரிக்காவுடனான தொடர் நிச்சயம் கடுமையானதாக இருக்கும். போட்டிகளில் நிச்சயம் அனல் பறக்கும். நல்லதொரு அணியாக அவர்கள் வந்துள்ளனர். ஆனால் இந்தியா, சமீபத்தில் இலங்கையில் சிறப்பாக விளையாடியுள்ளது.

ஆனால்... உள்ளூரில் நாமதானே புலி!

ஆனால்... உள்ளூரில் நாமதானே புலி!

ஆனால் எப்போதுமே உள்ளூரில் நாம்தான் புலிகள். நமது கைதான் ஓங்கியிருக்கும். 20 விக்கெட்களையும் வீழ்த்தும் பவுலிங் அட்டாக் தென் ஆப்பிரிக்காவிடம் இருக்கிறது. இருப்பினும் இந்தியாவிடமும் நல்ல பவுலர்கள் உள்ளனர். ஸ்பின்னர்களை் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

தாஹிர் கொஞ்சம் சத்தாய்க்கலாம்

தாஹிர் கொஞ்சம் சத்தாய்க்கலாம்

தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் அருமையான பந்து வீச்சாளர். அவரிடம் நல்ல அனுபவம் உள்ளது. இந்திய மைதானங்களை நன்கு அறிந்தவர் அவர். இந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே இந்தியர்களுக்கும் கூட இந்தத் தொடர் சவாலாகவே இருக்கும்.

நல்லா விளையாடுவாங்க.. கவனம் தேவை

நல்லா விளையாடுவாங்க.. கவனம் தேவை

பெரும்பாலான தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆடுபவர்கள். எனவே இங்குள்ள சூழல் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே முதலிலிருந்தே அவர்களை முடக்க முயல்வதே நல்லது.

சூப்பர் டைரக்டர்!

சூப்பர் டைரக்டர்!

இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்படுகிறார். அருமையாக செயல்படுகிறார். பிரமாதமாக செயல்படுகிறார். எனவே வெளிநாட்டுப் பயிற்சியாளர் குறித்து இப்போது பேசாமல் இருப்பதே நல்லது என்றார் கங்குலி.

Story first published: Wednesday, September 30, 2015, 13:09 [IST]
Other articles published on Sep 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+