Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர்தான் என்னோட முதல் விக்கெட்டா இருக்கணும்னு நெனைச்சேன்... தூக்கினேன்... அக்சர் படேல் அதிரடி!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் அக்சர் படேல் களமிறங்கியுள்ளார். முதல் இன்னிங்சில் ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி என 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் முந்தைய போட்டிகளில் ஜோ ரூட்டின் ஆட்டங்களை பார்த்து அவரது விக்கெட்டை வீழ்த்தியதாகவும் அவர் தனது முதல் விக்கெட்டாக இருக்க வேண்டும் என்று தான் திட்டம் தீட்டியதாகவும் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சை இரு அணிகளும் ஆடி முடித்துள்ளன. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது. இந்த போட்டியின்மூலம் அக்சர் படேல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.

முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

முதல் இன்னிங்சில் அவர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய முதல் விக்கெட்டாக ஜோ ரூட் இருக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

6 ரன்களுக்கு அவுட்

6 ரன்களுக்கு அவுட்

கடந்த போட்டிகளில் 2 இரட்டை சதம் மற்றும் ஒரு சதத்தை அடித்து சிறப்பான ஆட்டங்களை தந்த ஜோ ரூட், நேற்றைய போட்டியில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அக்சர் படேல், இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரூட்டை வீழ்த்த திட்டம்

ரூட்டை வீழ்த்த திட்டம்

கடந்த போட்டியில் ஜோ ரூட் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஜோ ரூட் அதிகமாக ஆடியதை தான் கவனித்ததாகவும் இதையடுத்து பௌலிங் ஸ்பீடை அதிகரித்து ரூட்டை வீழ்த்த திட்டமிட்டுள்ள சாதித்ததாகவும் அக்சர் கூறியுள்ளார். ஜோ ரூட்டை முதல் விக்கெட்டாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு சாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Monday, February 15, 2021, 15:24 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+