Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை ஸ்டம்பை பிடுங்கி குத்த நினைத்தேன்.. ஆஸி. கிரிக்கெட் பிரபலம் பரபரப்பு பேச்சு

சிட்னி: இந்திய வீரர் விராட் கோஹ்லியை ஸ்டம்பை பிடுங்கி குத்த நினைத்தேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எட் கோவன் தெரிவித்துள்ளார். ஒரு போட்டித் தொடரின் போது தனது தாய் நோய்வாய்ப்பட்டிருந்த போது விராட் கோஹ்லி மோசமான ஒரு வார்த்தையை கூறியதால் அப்படி தோன்றியதாக எட் கோவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்த இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதிக்கொண்டனர். தவறான வார்த்தை பிரயோகங்களும் பயன்படுத்தப்பட்டன.

எண்ணெய்யை ஊற்றும் எட் கோவன்

எண்ணெய்யை ஊற்றும் எட் கோவன்

ஏற்கனவே இந்திய-ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே மோதல் நெருப்பாக தகித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் எட் கோவன் அதில் எண்ணெய் ஊற்றும் விதத்தில் ஒன்றை கூறியுள்ளார்.

மோசமாக திட்டிய கோஹ்லி

மோசமாக திட்டிய கோஹ்லி

அதாவது ஒரு தொடரில் எட் கோவன் விளையாடும் போது அவரது தாயார் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். அப்போது விராட் கோஹ்லி மோசமான ஒரு வார்த்தையை பயன்படுத்தி எட் கோவனை திட்டியுள்ளார். அவர் தனது எல்லையை மீறி பேசினார் என்பதை உணராமல் பேசியதாக கூறும் கோவன்ன, நடுவர் எச்சரித்தப் பிறகு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார்.

ஸ்டம்ப்பால் குத்தனும் போலிருந்தது

ஸ்டம்ப்பால் குத்தனும் போலிருந்தது

இருப்பினும் அந்த நேரத்தில் ஸ்டம்ப்பை பிடுங்கி விராட் கோஹ்லியை குத்த வேண்டும் என தோன்றியதாகவும் எட் கோவன் தெரிவித்துள்ளார். அந்த தொடர் முழுவதும் சர்ச்சை நிறைந்ததாகவே இருந்தது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எட் கோவன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை மிக்க தொடர்

சர்ச்சை மிக்க தொடர்

மூளை மங்கிவிட்டதாக கூறப்பட்ட கருத்து மற்றும் சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்பில்லை என விராட் கோஹ்லி கூறியது உள்ளிட்டவற்றையும் எட் கோவன் தனது பேட்டியின் போது நினைவு கூர்ந்துள்ளார். ஸ்மித்தை ஏமாற்றுபவன் என கூறுவதை கோஹ்லி நிறுத்திய பின்னரும் ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை குறி வைத்து வருவதாக கோவன் கூறியுள்ளார்.

விராட் கோஹ்லியின் ரசிகன்

விராட் கோஹ்லியின் ரசிகன்

விராட் கோஹ்லி மீது இவ்வளவும் கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கோவன், தான் விராட் கோஹ்லியின் பெரிய ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லி ஆச்சரியப்பட வைக்கும் கிரிக்கெட் வீரர் என்றும் தன்னை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் என்றும் எட்கோவன் கூறியுள்ளார்.

ஆங்கிலம் முதல் மொழியல்ல

ஆங்கிலம் முதல் மொழியல்ல

அவர்களுக்கு ஆங்கிலம் முதல் மொழி அல்ல என்பதை நாங்கள் மறந்து விட்டோம். பின்னாடி அமர்ந்து ஏதோ குறைக்கிறார்கள் என கூறுவது எளிது. ஆனால் அவர்களுடன் ஹிந்தியில் பேச முயற்சிக்காத போது அப்படி பேசுவது பொருத்தமாக இருக்காது என்றும் எட் கோவன் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 1, 2017, 14:42 [IST]
Other articles published on Apr 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+