எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்..! ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி
மும்பை:சிறுவயதில் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு, புகைப்பட கண்காட்சியை வைக்க போவதாக தல தோனி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவதால் இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

அதனால், தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் செல்லமாக தல என்று கூறி மகிழ்வர். தோனி தலையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை மற்றும் டி20 போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதனை படைத்து உள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தோனி தமது சிறுவயது பொழுதுபோக்கு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:நான் இப்போ என்னோட சின்ன வயசு ரசிகசியத்தை சொல்லப்போறேன். நான் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
அதேபோல் சிறுவயதில் நிறைய ஓவியங்களயும் வரைந்துள்ளேன். இவை தான் அந்த ஓவியங்கள். அதற்கான கண்காட்சியை நடத்த உள்ளேன். ஆனால் அதற்கு இன்னும் சிறுது காலமாகும். ஓவியத்தை பற்றி தெரிந்தவர்கள், என்னுடைய ஓவியத்தை பார்த்து அறிவுரை கூறுங்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications