Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த் - தம்மிகா மோதலை ரசித்தேன்.. சிரிச்சிக்கிட்டே கூறும் கோஹ்லி

கொழும்பு: வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தம்மிகா பிரசாத் இடையே நடந்த மோதல் கட்டுக்குள்தான் இருந்தது என்றும், அதை தான் வெகுவாக ரசித்ததாகவும் கூறியுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி.

கோஹ்லியிடம் இருந்து வந்த ஆக்ரோஷம் இப்போது அவரது தலைமையிலான அணிக்கும் மாறியிருப்பை பலரும் கவலையுடன் உற்று நோக்கினாலும் கூட இந்த ஆவேச மோதல் தன்னை மகிழ்வித்ததாக கூறியுள்ளார் கோஹ்லி.

இஷாந்த், தம்மிகா இடையிலான மோதல் தனக்கு மகிழ்ச்சி தந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கட்டுக்குள் இருக்கும் வரை எதுவும் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி:

மோதல் நல்லதுதான்

மோதல் நல்லதுதான்

அந்த சம்பவம் எனக்கு மகிழ்ச்சியே தந்தது. நான் வருத்தப்படவில்லை. சரியான சமயத்தில்தான் அது நடந்தது. வேண்டும் என்றே அவர்கள் இஷாந்த்தை கோபப்படுத்தினர். அதனால்தான் அவரும் கோபப்பட்டார்.

கட்டுக்குள் இருந்த வரை சரித்தான்

கட்டுக்குள் இருந்த வரை சரித்தான்

கட்டுக்குள் இருக்கும் வரை எதுவும் சரிதான். இதுவும் கூட கட்டுக்குள்தான் இருந்தது. சரியானதாகவும் இருந்தது. எனவே நான் அதுபற்றி கவலை கொள்ளவில்லை.

தீப்பொறி திருமுகமாக மாறிய இஷாந்த்

தீப்பொறி திருமுகமாக மாறிய இஷாந்த்

இஷாந்த் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தொடர்ந்து 19 ஓவர்கள் ஒரு சிங்கிள் ரன் கூட கொடுக்காமல் அவர் பந்து வீசினார்.

அவர்களுக்கு வேண்டும்

அவர்களுக்கு வேண்டும்

அவர்கள் இஷாந்த்தைக் கோபப்படுத்தியற்கான பலனை அனுபவித்தார்கள். ஒரு சிங்கிள் ரன் கூட எடுக்க முடியாமல் 19 ஓவர்கள் அவர்களைத் திணறடித்து விட்டார் இஷாந்த். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வந்து பந்து வீசினார் இஷாந்த்.

இப்படித்தான் அடிச்சு நொறுக்கனும்

இப்படித்தான் அடிச்சு நொறுக்கனும்

இப்படிப்பட்ட கோபக்கார வேகப் பந்து வீச்சாளர் கிடைத்தால் எந்த கேப்டனுமே மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போவார். நானும் அதே மகிழ்ச்சியை அனுபவித்தேன் என்றார் கோஹ்லி.

Story first published: Wednesday, September 2, 2015, 12:21 [IST]
Other articles published on Sep 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+