Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னிடம் கேட்டுவிட்டா என்னை நீக்கினீர்கள்? தோனியை லாக் செய்த சேவாக்.. வலுக்கும் எதிர்ப்பு!

Recommended Video

Dhoni Retirement : என்னிடம் கேட்டுவிட்டா என்னை நீக்கினீர்கள்?.. தோனியை லாக் செய்த சேவாக்- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் இருந்து சில மூத்த வீரர்களை நீக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் மூவேந்தர்களாக இருந்தவர்கள் சச்சின், சேவாக், கங்குலி. இவர்கள் மூவரும் அணிக்காக நிறைய செய்து இருந்தாலும் பெரிய அளவில் கோப்பைகளை அணிக்கு பெற்று கொடுத்தது கிடையாது.

தோனியின் வருகைக்கு பின் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த நிலையில் சேவாக், கம்பீர் போன்ற வீரர்களின் வாய்ப்புகளை தோனிதான் தட்டிப்பறித்தார் என்ற சர்ச்சை இப்போதும் இருக்கிறது. அவர்கள் அணியில் இருந்து ஓய்வு பெற தோனிதான் காரணம் என்று சர்ச்சை நிலவி வருகிறது. சேவாக், கம்பீர் ரசிகர்கள் இப்போதும் தோனியை வெளிப்படையாக குற்றஞ்சாட்டுவது நடந்து வருகிறது.

இப்போது என்ன

இப்போது என்ன

கடைசியில் சேவாக், கங்குலிக்கு ஏற்பட்ட நிலை தோனிக்கும் ஏற்பட்டுள்ளது. தோனிக்கு வயதாகிவிட்டது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது சேவாக்கும் தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

சேவாக் பேசியதாவது, நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் 2007க்கு பின்பெல்லாம் அப்படி நடக்கவில்லை. வீரர்களை நீக்கும் போது அவர்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. சில வீரர்களை நீக்க அணி நிர்வாகம் யோசிகிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

அணியும், தேர்வு கமிட்டியும் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார். இவர் தோனியை தாக்கித்தான் இப்படி பேசி உள்ளார். தோனியை பதவி விலக செய்ய இவர் மறைமுகமாக நெருக்குகிறார் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, July 16, 2019, 12:51 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+