ஆமா, நேத்து நான் சற்று வலுவிழந்த புயலாகத்தான் இருந்தேன்... கெய்ல்!
துபாய்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் களத்தில் குதித்த அதிரடிப் புயல் கிறிஸ் கெய்ல், அட்டகாசமான ஒரு ஸ்கோரை நோக்கிப் போனபோது அதிரடியாக வீழ்த்தப்பட்டார்.
நேற்றைய போட்டியில் அவர் மட்டும் தொடர்ந்து ஆடியிருந்தால் பெங்களூர் அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும். ஆனால் பஞ்சாபின் சந்தீப் சர்மா கெய்ல் புயலை தனது ஒற்றைப் பந்தால் ஊதித் தள்ளி விட்டார்.
இதுகுறித்து கெய்ல் கூறுகையில் நான் நேற்று 100 சதவீத பார்மில் இல்லை என்பது உண்மைதான் என்றார்.

முதல் நான்கு போட்டிகளில் ஆடவில்லை
பெங்களூர் அணியின் முதல் 4 போட்டிகளில் கெய்ல் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை.

நேற்று ஓப்பனிங்
இந்த நிலையில் நேற்று கெய்ல் இடம் பெற்றார். ஓப்பனிங்கிலும் இறங்கினார்.

அதிரிபுதிரி அதிரடி
பழைய கெய்லாக மாறி அதிரடியாக ஆடினார். 7 பந்துகளை மட்டுமே சந்தித்து 20 ரன்களைக் குவித்தார்.

100 சதவீதம் பிட் இல்லை
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சில ஊசிகளைப் போட்டுக் கொண்டுதான் ஆட வந்தேன். 100 சதவீதம் நான் பிட்டாக இல்லைதான்.

படுத்தே இருந்ததால் மந்தம்
முதுகு வலி காரணமாக பல நாட்கள் ஓய்வில் இருந்ததால், படுத்தே இருந்ததால் சற்று மந்தமாகவும் உணர்ந்தேன்.

அடித்து ஆடத்தான் விரும்பினேன்
ஆக்ரோஷமாக அடித்து ஆடவே விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை என்றார் கெய்ல்.


Click it and Unblock the Notifications