Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 வயசுலயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வாயிட்டேன்...

டெல்லி : இந்திய அணியில் மொத்தமே 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது கையிப், தன்னுடைய 20வது வயதிலேயே தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டார்.

கடந்த 2002ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய கையிப், இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சச்சின், டிராவிட் மற்றும் சேவாக் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் தான் மற்றும் யுவராஜ்சிங் போன்றவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக வெற்றி

இலங்கைக்கு எதிராக வெற்றி

அன்டர் 19 அணியின் கேப்டனாக செயல்பட்ட முகமது கையிப், கடந்த 2000வது ஆண்டு ஜனவரி 28ம் தேதி கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிக் கொள்ள காரணமாக இருந்தார். இந்தியாவின் அன்டர் 19 அணியின் முதல் வெற்றி அது. இதையடுத்து அவர்மீது தேர்வாளர்கள் பார்வை விழுந்தது.

கவனம் பெற்ற கையிப்

கவனம் பெற்ற கையிப்

இந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அரையிறுதியிலும் வெற்றி பெற்ற இந்தியாவின் அன்டர் 19 அணி, இலங்கையை இறுதிப்போட்டியில் வெற்றி கொண்டது. இந்த தொடரில் மெதுவாக தங்களது ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி அதிரடியை காண்பித்தது. முதல் அன்டர் 19 வெற்றியையும் சுவைத்தது. யுவராஜ் சிங்கின் ஆட்டமும் இந்த தொடரில் கவனம் பெற்றது.

சர்வதேச வீரர்களின் பௌலிங்

சர்வதேச வீரர்களின் பௌலிங்

இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் டீமிற்காக முகமது கையிப் தனது 20வது வயதில் தேர்வானார். அந்த சிறிய வயதில் ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், நான்டீ ஹேவார்ட் உள்ளிட்டவர்களின் பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உண்மையை கூறவேண்டுமென்றால் அந்த பந்துவீச்சை எதிர்கொள்ள தான் தயாராக இல்லை என்றும் கையிப் தெரிவித்துள்ளார்.

2002ல் ஒருநாள் போட்டிகள்

2002ல் ஒருநாள் போட்டிகள்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகமான பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் கையிப் தெரிவித்தார். இதையடுத்து தன்னுடைய வாய்ப்புகளை பறிகொடுத்த கையிப், தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்து 2002ல் இங்கிலாந்திற்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது முதல் வாய்ப்பை பெற்றார். இந்த இரண்டு வருட இடைவெளியில் தான் சர்வதேச போட்டிகள் குறித்து அதிகமாக கற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களுக்கு சுதந்திரம்

வீரர்களுக்கு சுதந்திரம்

2000ல் அன்டர் 19 அணியின் கோச்சாக செயல்பட்ட ரோஜர் பின்னி குறித்தும் கையிப் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்னி சிறந்த வீரராகவும் உலக கோப்பை வெற்றியாளராக இருந்தபோதிலும் கேப்டனாக தனக்கு சிறப்பான சுதந்திரத்தை அளித்ததாக கையிப் தெரிவித்துள்ளார். மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் வீரர்களை அவர் எதிர்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 17, 2020, 19:44 [IST]
Other articles published on Jun 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+