Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தா பாரு சச்சின்.. கங்குலி கொடுத்த "வார்னிங்"!

கொல்கத்தா: அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆல் ஸ்டார் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, தான் ஓப்பனிங் ஆட வாய்ப்பளிக்கப்படாவிட்டால் முதல் விமானத்தைப் பிடித்து கொல்கத்தா வந்து விடுவேன் என்று ஜோக்கடித்துள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் அரை மணி நேரம் பேட்டிங் பிராக்டிஸ் செய்தார் கங்குலி. இவர் சச்சின் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த அணிக்கும், வார்னேவின் வார்னே வாரியர்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி நவம்பர் 7ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் தற்போது கங்குலி தயாராகி வருகிறார்.

இந்தா பாரு சச்சின்

இந்தா பாரு சச்சின்

இப்போட்டி குறித்து கங்குலி ஜாலியான ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், நான் சச்சினிடம் சொல்லி விட்டேன். எனக்கு ஓப்பனிங் தராவிட்டால் முதல் பிளைட்டைப் பிடித்து கொல்கத்தா திரும்பி விடுவேன் என்று. எப்பூடி என்று கூறிச் சிரித்தார் கங்குலி.

நல்லாதான் விளையாடுகிறார்

நல்லாதான் விளையாடுகிறார்

நேற்றைய பயிற்சியின்போது ஸ்பின்னர்களை பந்து வீச வைத்து பேட்டிங் பிராக்டிஸ் செய்தார் கங்குலி. அவரது ஸ்டைல் கவர் டிரைவ்களை அழகாக அடித்தார்.

சும்மா அடிக்கிறேன் பாஸ்

சும்மா அடிக்கிறேன் பாஸ்

முன்பு போல பார்மில் இருப்பதாக தெரிகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் கிடையாது. சாத்தியமும் இல்லை. சும்மா ஜாலியாக விளையாடுகிறேன் என்று நேர்மையாக பேசினார் கங்குலி.

விசா கிடைக்காமல் கஷ்டப்படும் விவிஎஸ் லட்சுமண்

விசா கிடைக்காமல் கஷ்டப்படும் விவிஎஸ் லட்சுமண்

இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இன்னொரு முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணுக்கு விசா கிடைக்காமல் இழுபறியாக உள்ளது. அதுகுறித்து கங்குலி கூறுகையில், இன்னும் விவிஎஸ்ஸுக்கு விசா கிடைக்கவில்லை. கவலையாக உள்ளார். ஆனால் நிச்சயம் அவரும் சரியான நேரத்துக்கு வந்து விடுவார் என்றார் கங்குலி.

பலம் எப்படின்னு தெரியலே

பலம் எப்படின்னு தெரியலே

தனது உடல் தகுதி குறித்து கங்குலி காமெடியாக கூறுகையில், தெரியவில்லை, விளையாடும்போதுதான் தெரியும், கை, இடுப்பு, கால் எப்படி பலமாக இருக்கிறது என்று என்றார்.

நயமான கிரிக்கெட்டுக்கு உத்தரவாதம்

நயமான கிரிக்கெட்டுக்கு உத்தரவாதம்

இருப்பினும் அத்தனை பேரும் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றும் கங்குலி கூறினார். யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்றும் கங்குலி தெரிவித்தார்.

Story first published: Wednesday, November 4, 2015, 14:04 [IST]
Other articles published on Nov 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+