Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மச்சான் நீ கட் பண்ணாத.. நான் கிஸ் பண்றேன்... "கட்டிங்"கை வைத்து விளையாடிய மனைவியும், நீஷமும்!

ஆக்லாந்து: என்ன விளையாட்டு இது என்று வடிவேலு படத்தில் வருவது போலத்தான் இருக்கிறது இந்த காமெடி. எல்லாம் நம்ம நியூசிலாந்து வீரர் பென் கட்டிங்கை வைத்துத்தான்.

கொரோனாவைரஸ் வந்தாலும் வந்தது உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்துறை. திரும்பத் திரும்ப சொல்வதற்கு என்ன இருக்கிறது. எல்லா விளையாட்டும் நின்று போய் விட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து விளையாடியபடிதான் உள்ளனர்.

அந்த வகையில் பென் கட்டிங்கை வைத்து ஒரு விளையாட்டு நடந்துள்ளது. செம ஜாலியான விளையாட்டுதான் இது. இந்த விளையாட்டின் நாயகன் வேறு யாரு பென் கட்டிங்கின் தாடிதான்!

அடர்த்தியா தாடி வைத்தால் கொரோனா

அடர்த்தியா தாடி வைத்தால் கொரோனா

அதாவது தாடி வைத்திருப்போர், குறிப்பாக அடர்ந்த தாடி வைத்திருப்போருக்கு வைரஸ் ஈஸியாக பரவும் என்று யாரோ கிளப்பி விட்டு விட்டார்கள். இதுதான் இப்போது பென் கட்டிங்கை வைத்து விளையாட்டு விளையாட காரணமாகி விட்டது. காரணம் பென் கட்டிங் நல்லா புஷ்டியாக தாடி வைத்திருப்பார். பெயரில் மட்டும்தான் கட்டிங் இருக்கு.. தாடியை கட் செய்வதே இல்லை நம்மாளு.

தாடிக்கார நண்பாஸ் அதிகரிப்பு

தாடிக்கார நண்பாஸ் அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வீரர்கள் பலர் அடர்த்தியான தாடியுடன்தான் திரிகிறார்கள். நம்ம ஊரில் கூட ரவீந்திர ஜடேஜா, கோலி என பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் கட்டிங்கும் கூட திக்கான தாடியுடன்தான் இருக்கிறார். இந்த நிலையில் அவரது போட்டோவை வைத்து மனைவி எரின் ஹாலந்து ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு போட அது வைரலாகி விட்டது.

View this post on Instagram

BYE BYE BEARD 😍👏🏻 @cuttsy_31

A post shared by ERIN HOLLAND (@erinvholland) on

கட்டிங்கின் மனைவி எரின் போட்ட இன்ஸ்டா

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கட்டிங் தாடியுடன் நிற்கிறார். அவரது தாடியைப் பிடித்து கொஞ்சியபடி பை பை என்று போட்டுள்ளார் எரின். இந்த புகைப்படம்தான் வைரலாகி விட்டது. இதைப் பார்த்த சக நியூசிலாந்து வீரர் நீஷம் சும்மா இருக்காமல் உள்ளே புகுந்து கலாய்த்து விட்டுப் போய் விட்டார். அது இப்போது வைரலாகி விட்டது.

உள்ளே புகுந்து கலாய்த்த நீஷம்

உள்ளே புகுந்து கலாய்த்த நீஷம்

எரின் போட்ட அந்த பதிவுக்கு வந்த நீஷம், கட்டிங் உன்னோட தாடியை எடுக்காதே.. அப்படியே விட்டு வைத்தால் நான் உனக்கு ஒரு முத்தம் கொடுப்பேன் என்று கூற கலகலப்பாகி விட்டது அந்த பதிவே. இந்த கமெண்ட்டுக்கு வந்து குவிந்த கமெண்டுகள் 90ஐத் தாண்டி ஓடி விட்டது. அந்த அளவுக்கு சுவாரஸ்யமான பல கமெண்ட்டுகளை இரு தரப்பும் குவித்து விட்டது. கடைசியில் எரின் போட்ட பதிவு,, நீஷம் பக்கம் போய் விட்டது.

போட்டிகள் எல்லாம் ரத்து

போட்டிகள் எல்லாம் ரத்து

கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஏற்கனவே ரத்தாகி விட்டன. அதில் பென் கட்டிங்கும் இணைந்து ஆடி வந்தார். அவர் குவெட்டா கிளாடியேட்ட்ஸ் அணிக்காக ஆடி வந்தார். ஆனால் இந்த அணி சுற்றுப் போட்டிகளோடு கிளம்பிப் போய் விட்டது. நாக் அவுட் சுற்றுக்கு அது தகுதி பெறவில்லை என்பது முக்கியமானது.

Story first published: Sunday, March 22, 2020, 14:33 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+