Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு சதத்தை தூக்கி குப்பையில போடுங்க..!! இளம் வீரரை விளாசிய முன்னாள் வீரர்

லண்டன்: வங்கதேசத்துக்கு எதிரான இமாம் உல் ஹக்கின் சதத்தை குப்பை தொட்டியில் தான் தூக்கி போட வேண்டும் என்று பாக். முன்னாள் வீரர் தன்வீர் அகமது கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக கோப்பை தொடரில், இந்தியா, ஆஸி. உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றோடு வெளியேறிவிட்டன. பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே நடையை கட்டியது.

பாகிஸ்தான், தமது முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் படு தோல்வி அடைந்தது. பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

மொத்தமுள்ள 9 போட்டிகளில் முதல் பாதியில் தோல்விகளை கண்ட பாகிஸ்தான், ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களால் வீறு கொண்டு எழுந்தது. அதற்கு இந்தியாவுக்கு எதிரான தோல்வியும் ஒரு காரணம்.

தொடர்ச்சியான வெற்றிகள்

தொடர்ச்சியான வெற்றிகள்

ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்றது. 11 புள்ளிகள் இருந்த போதிலும், ரன் ரேட்டில் கோட்டை விட்டதால் அரையிறுதியை கோட்டை விட்டது.

ஷாகீனுக்கு பாராட்டுகள்

ஷாகீனுக்கு பாராட்டுகள்

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பவுலிங் மிக சிறப்பு. இளம் வீரர் ஷாகீனின் அசத்தல் பவுலிங்கை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. பேட்டிங் சரியாக இல்லாதது தான் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

இமாம் உல் ஹக் சதம்

இமாம் உல் ஹக் சதம்

வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடிக்க, பாகிஸ்தான் அந்த போட்டியில் வென்றது. ஆனாலும் அந்த சதம் எந்த பயனையும் தர வில்லை. மாறாக சதமடிக்கப்பட்ட அந்த விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

தன்வீர் அகமது

தன்வீர் அகமது

இந் நிலையில், இமாம் உல் ஹக் சதத்தை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது காட்டமாக விமர்சித்துள்ளார். தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:

விமர்சனம் கிடையாது

விமர்சனம் கிடையாது

இமாம் உல் ஹக்கின் ஆட்டத்தை வக்கார் யூனிஸ் போன்றவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் இமாமின் மாமா இன்சமாம் உல் ஹக். அவர்களின் தொடர்புக்கு சேதம் ஏற்படாத வண்ணம் தான் நடப்பார்கள். அதற்கேற்ப தான், அவர்கள் இமாம் உல் ஹக்கை விமர்சிக்கமாட்டார்கள் என்றார்.

Story first published: Sunday, July 7, 2019, 16:45 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+