For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போன வேர்ல்டு கப் மாதிரியே இப்பவும் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்...!! நம்பிக்கையோடு சொல்லும் அவர்

லண்டன்:நடப்பு உலக கோப்பை போட்டியில் மீண்டும் ஹாட்ரிக் எடுக்க முடியும் என்று இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியிருக்கிறார்.

இலங்கை அணின் அனுபவ பந்துவீச்சாளர் மலிங்கா. உலக கோப்பையில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சக நாட்டு வீரரான ஜெயசூர்யாவுக்கு இணையான ஒருநாள் விக்கெட் வீழ்த்தியவர் எனும் பெருமையை பெறுவார்.

I will try to take hat trick in this world cup says malinga

2007-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டை மலிங்கா வீழ்த்தினார். அதுபோன்ற சாதனையை இந்த உலக கோப்பையிலும் படைப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: உலக கோப்பை போட்டியில் கடந்த முறை போன்று இம்முறையும் ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன். இங்கிலாந்தில் நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். அதன் சூழல்கள் எனக்கு பந்துவீச்சில் பல்வேறு சோதனை செய்துபார்க்க உதவியாக இருக்கும்.

அங்கு வெயில், குளிர் என்று எந்த காலநிலையாக இருந்தாலும், ஒரு பந்து வீச்சாளருக்கு உண்மையான சோதனை சூழலுக்கு ஏற்றார்போல் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்பதுதான்.விக்கெட் வீழத்துவதில் இங்கிலாந்தில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது.

ஐபிஎல் போட்டியில் கூட மிக சிறப்பாக பந்துவீசி, சாம்பியன் ஆனோம். அந்த நம்பிக்கையோடு பந்துவீசுவேன். பல முன்னணி வீரர்கள் இல்லை. இலங்கை அணியில் இளம் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளனர். ரசிகர்கள் தெரிந்து வகையில் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.

Story first published: Monday, May 27, 2019, 19:24 [IST]
Other articles published on May 27, 2019
English summary
I will try to take hat trick in this world cup says malinga.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+