
வருமானம்
இப்பொது எல்லாம் ஐபிஎல் மீது தான் அவர்களுடைய ஆர்வம் இருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது. அது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் ஐபிஎல் தொடர் உங்களுக்கு எவ்வளவு காலம் தான் கை கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.

கிரிக்கெட்டே இருக்காது
அது எங்கேயும் செல்லாது. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்தால் நாம் கிரிக்கெட்டும் சேர்ந்து அழிந்து விடும். டெஸ்ட் போட்டி இல்லை என்றால் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணமே இருக்காது. டெஸ்ட் கிரிக்கெட் மீதுதான் அனைத்து வீரர்களுக்கும் கவனம் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது இந்தியாவில் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்கள். ஆனால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.

ஸ்மித்துக்கு பாராட்டு
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவ நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது. ஏனென்றால் அவர்கள் வித்தியாசமான ஆடுகளத்தில் விளையாட இருக்கிறார்கள். ஸ்மித் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி தற்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட போவதாக அறிவித்துள்ளார்.இது நிச்சயம் நல்ல விஷயம்.ஏனென்றால் ஸ்மித் எதிர்காலத்தை குறித்து யோசிக்கிறார் என்று என் இயன் போத்தம் தெரிவித்துள்ளார்.

கோவம் ஏன்?
இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான வில் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமக்கு டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம் என அவர் விலகி டி20 கிரிக்கெட்டில் விளையாட சென்று விட்டார். இதைப் போன்று ஆஸ்திரேலியாவில் மார்கஸ் ஸ்டோனிஸ்,டேனியல் கிறிஸ்டின், டீம் டேவிட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் டி20 கிரிக்கெட்டில் பெரிய ஆளாக மாறிவிட்டார்கள். இதனை மறைமுகமாக சாடும் வகையிலே இயன் போத்தம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications