சுற்றிச் சுழன்று வந்த பந்து.. அடித்து நொறுக்கி ரன் குவித்த விவிஎஸ்.. சாப்பலுக்கே பிடிச்சிருக்கே!
மெல்போர்ன்: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் தனக்குப் பிடித்த 2 அருமையான ஆட்டம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று நம்ம ஊர் விவிஎஸ் லக்ஷ்மன் அதிரடியாக எடுத்த 281 ரன்களும் ஒன்று.
Recommended Video
தனது வாழ்க்கையில் தான் கண்ட இரண்டு அருமையான இன்னிங்ஸ்கள் என்று அவர் குறிப்பிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த 281 ரன்கள். இந்த ஸ்கோரை 2001ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடியபோது எடுத்தார் விவிஎஸ் லக்ஷ்மன்.
இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில் மறு முனையில் ராகுல் டிராவிட் சுவர் போல நின்று 180 ரன்களைக் குவித்தார். இவர்களின் அபார ரன் குவிப்பால் இந்தியா அபார வெற்றியும் பெற்றது.

டிராவிடும், லக்ஷ்மனும் இணைந்து ஆட்டம்
இந்தப் போட்டியில் லக்ஷ்மனும், டிராவிடும் இணைந்து 376 ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியாகும் இது. இதைத்தான் இயான் சாப்பல் மெய் சிலிர்த்துப் போய் கூறியுள்ளார். சாப்பல் இதுதொடர்பாக ஒரு இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இப்போது கொரோனாவைரஸால் போட்டிகள் இல்லை. ஆனால் எனக்கு சில போட்டிகள் குறித்த நினைவுகள் மனதில் ஓடுகிறது. அதில் இரண்டு இன்னிங்ஸ்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மறக்க முடியாத லக்ஷ்மன் ஆட்டம்
அதில் ஒன்று இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மன் ஆடியது. இன்னொன்று ஆஸ்திரேலியாவின் டோக் வால்டர்ஸ் ஆடிய இன்னிங்ஸ். லக்ஷ்மன் 2001ல் ஆடிய ஆட்டம், அவர் குவித்த அருமையான 281 ரன்கள் மகத்தானது. அதிலும் ஷேன் வார்னே போன்றவர்களின் மாபெரும் சுழற் பந்து வீச்சை தடம் புரளச் செய்து ரன் குவிப்பது என்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் அனாசயமாக அந்தப் போட்டியில் வார்னேவே பீட் செய்திருப்பார் லக்ஷ்மன்.

சாப்பல் கேள்விக்கு வார்னே பதில்
அந்தப் போட்டி முடிவுக்குப் பிறகு வார்னேவிடம் பேசிய சாப்பல், நீ எப்படி பவுலிங் செய்தேன்னு தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், அவ்வளவு மோசமாக பந்து வீசியதாக நினைக்கவில்லை என்று பிடி கொடுக்காமல் பதில் கொடுத்தார். அதற்கு சாப்பல், இல்லை மோசமாகத்தான் இருந்தது உனது பந்து வீச்சு என்று தெரிவித்துள்ளார். உண்மையில் வார்னேவின் பந்து வீச்சை லக்ஷ்மன் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் அப்போட்டியில்.

நல்ல புட் ஒர்க்
அந்த இன்னிங்ஸில் வார்னே பந்தை அழகாக டேக்கிள் செய்து உயர்த்தி உயர்த்தி அடித்தார் லக்ஷ்மன். அதை அடிக்கடி செய்தார். அருமையான புட் ஒர்க் அது. இதை வார்னேவே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். மொத்தம் 452 பந்துகளைச் சந்தித்தார் லக்ஷ்மன். அதில் 44 பவுண்டரிகளை விளாசினார். அந்த இன்னிங்ஸில் எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்து பந்து வீச்சை சரியாக விளாசித் தள்ளினார். இது தன்னைக் கவர்ந்த சிறந்த ஆட்டம் என்று கூறியுள்ளார் சாப்பல்.


Click it and Unblock the Notifications